சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

போலீசே வந்தாலும் என்னை கண்டுபிடிக்க முடியாது.. சீரியல் நடிகைக்கு அர்த்த ராத்திரியில் வந்த மிரட்டல்

நடிக்க வந்து விட்டாலே நடிகைகள் பல பிரச்சனைகளை தாண்டி தான் வரவேண்டும். அதிலும் துணை நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள், டாப் ஹீரோயின்கள் என அனைவருக்கும் சில அந்தரங்க தொல்லைகளும் வரத்தான் செய்கிறது.

அப்படித்தான் பிரபல சீரியல் நடிகைக்கும் அர்த்த ராத்திரியில் ஒரு பகிரங்க மிரட்டல் வந்திருக்கிறது. சன் டிவியில் கேளடி கண்மணி, கல்யாண பரிசு உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை ஜெயலட்சுமி மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களிலும் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறார்.

இவருக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து போன் கால் வந்திருக்கிறது. அதில் பேசிய அந்த நபர் ஜெயலட்சுமியை மிகவும் தரக்குறைவாக பேசியதோடு அருவருப்பான தகாத வார்த்தைகளை கூறி அந்தரங்க தொல்லையும் கொடுத்திருக்கிறார்.

Also read: விஜய் டிவியின் பெஸ்ட் ஹீரோயினை தட்டித் தூக்கிய சன் டிவி.. டிஆர்பிக்கு வைக்க போற ஆப்பு

அதைப் பற்றி கூறியிருக்கும் ஜெயலட்சுமி எனக்கு போன் செய்தது ஒரு சின்ன பையன் தான். ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேச கூடாதோ அப்படி எல்லாம் அவன் பேசினான். நான் அவனிடம் உன்னை கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது என்று சொன்னேன்.

அதற்கு அவன் யாராலும் என்ன பிடிக்க முடியாது. போலீசே வந்தாலும் நான் சிக்க மாட்டேன் என்று கூறினான். மேலும், நீ அந்த கட்சியில தானே இருக்க. நாங்க நோட் பண்ணி இருக்கோம். உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என மிரட்டவும் செய்தான்.

உடனே நான் போனை கட் செய்து விட்டு காவல் துறையில் ஆன்லைன் புகார் கொடுத்தேன். ஆனால் அதன் பிறகும் கூட எனக்கு இந்த தொல்லை வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் நான் இப்போது காவல்துறையில் நேரடியாக புகார் கொடுத்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also read: 90ஸ் கிட்ஸ் பேவரைட் சீரியலின் இரண்டாம் பாகம்.. 800 எபிசோடுகளை கடந்த சன் டிவி நாடகம்

Trending News