வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திடீரென நிறுத்தப்பட்ட தங்கலான் படப்பிடிப்பு.. என்னதான் ஆச்சு மருத்துவமனையில் விக்ரம்

கோலிவுட்டில் ஒவ்வொரு படத்திலும் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னைத்தானே செதுக்கி நடிக்க கூடியவர் சீயான் விக்ரம். இப்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

கோலார் தங்க வயலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

Also Read: பவர்ஃபுல்லான டைட்டிலுடன் தயாராகும் 9 டாப் ஹீரோக்களின் படங்கள்.. இந்த மூன்றுக்கு தான் மவுசு அதிகம்

இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட பட குழு திட்டமிட்டு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திடீரென தங்களான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விக்ரம் மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

ஏனென்றால் தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து நடந்துள்ளதாக விக்ரமின் மேலாளர் சூர்யா நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விக்ரம் தங்கலான் படப்பிடிப்பிற்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சீயான் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துள்ளது.

Also Read: மேடையில் மயிரை வைத்து விக்ரமை வாரிவிட்ட பார்த்திபன்.. தங்கலான் கொடுத்த பதிலடி

இதனால் சிறிது காலம் தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது. விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என உறுதியுடன் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சீயான் ரசிகர்களை பதற வைத்துள்ளது.

ஏனென்றால் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் செம ஸ்டைலிஷ் ஆக வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்த விக்ரமுக்கு இப்படி ஒரு நிலையா! என்று வருந்துகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து மறுபடியும் தங்கலான் படத்தில் மிரட்ட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: வெளிவந்தது தங்கலான் படத்தின் உண்மை கதை.. பல ரகசியம் அடங்கிய டைட்டிலை வைத்த பா ரஞ்சித்

Trending News