வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

40 வயது இயக்குனரை வளைத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. நடிகரின் அண்ணனுக்கு வீசிய வலை

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது தெலுங்கு பக்கம் திரும்பி இருக்கும் இவருடன் நடிக்க பல இளம் நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர்.

இப்படி பல போட்டிகளுக்கு நடுவில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் அனு இமானுவேல். ஏற்கனவே இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வரும் இவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

Also read : மாவீரன் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்.. வசூல் மன்னனின் வேட்டை ஆரம்பம்

இந்நிலையில் இவர் இயக்குனர் ஜோதி கிருஷ்ணனுடன் காதலில் இருக்கிறாராம். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கேடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் தெலுங்கிலும் இவர் சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இன்னும் இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ரவி கிருஷ்ணாவின் உடன் பிறந்த அண்ணன் தான் இவர். தற்போது 40 வயதாகி இருக்கும் இவருடன் தான் அனு இமானுவேல் ஊர் சுற்றி கொண்டிருக்கிறாராம்.

Also read : தூக்கிவிட்டவரை மறந்து சிம்புவை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்த நடிகர்

ஜோதி கிருஷ்ணன் இயக்கிய ஆக்சிஜன் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அனு இமானுவேல் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறார்கள் அந்த பழக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இவர்களுடைய காதல் விவகாரம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது டேட் செய்து கொண்டிருக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்து உள்ளார்களாம். அதனால் கூடிய விரைவில் இவர்களின் திருமண அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read : சிவகார்த்திகேயனை புறக்கணித்த பிரபல சேனல்.. சரியான நேரத்தில் கொடுத்த பதிலடி

Trending News