செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஷாலை படுகுழியில் தள்ளிய லத்தி.. தோல்விக்கான 10 பொருத்தமும் பக்காவா இருக்கு

அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த விஷால் லத்தி படத்தை பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்பை இப்படம் ஏமாற்றி விட்டது. வினோத்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா, பிரபு போன்ற பலர் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை கவர தவறி இருக்கிறது.

அப்படி படத்தில் என்னதான் குறை இருக்கிறது, எதனால் இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதற்கான காரணங்களை இங்கு காண்போம். படத்தின் கதையை பொருத்தவரை நம் தமிழ் சினிமா ஏற்கனவே அரைத்து அரைத்து புளித்து போன ஒரு கதை தான். ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக தொடங்கினாலும் அடுத்தடுத்த காட்சிகள் ரசிகர்கள் யூகிக்கும் வகையில் தான் இருக்கிறது.

Also read: அத்தனையும் நடிப்பு, உள்ளுக்குள்ள அம்புட்டு ஆசை.. உடைந்து போன விஷால் போடும் வெளி வேஷம்

காட்சிகள் மட்டுமல்ல சில வசனங்களை கூட படம் பார்ப்பவர்கள் முன்பே சொல்லி விடுவது தான் கொடுமை. அதிலும் படத்தின் போஸ்டரை பார்க்கும்போது இதில் எந்த அளவுக்கு ஆக்ரோஷமான காட்சிகள் இருக்கும் என்பது நமக்கு தெரிந்தது. அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் படம் முழுவதும் சண்டை காட்சிகள் தான் அதிகமாக இடம்பெற்றுள்ளது.

இதுவே பார்ப்பவர்களுக்கு ஒரு வித சலிப்பை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் கிளைமாக்ஸ் காட்சியின் நீளமும் மிகவும் அதிகம். படம் முழுக்க லத்தியை சுழற்றி அதிரடி காட்டும் விஷால் அந்த இறுதி காட்சியில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் அடித்து துவம்சம் செய்வதெல்லாம் கொஞ்சம் அல்ல ரொம்பவும் ஓவர் தான்.

Also read: கான்ஸ்டபிள் முருகானந்தமாக வாழ்ந்திருக்கும் விஷால்.. லத்தி பட முழு விமர்சனம்

விஷாலுக்கு அடுத்தபடியாக வில்லன் பற்றி சொல்ல வேண்டும். தன்னை யார் அடித்தது என்றே தெரியாமல் தவிக்கும் வில்லன் அடித்தவரை கண்டுபிடிக்க செய்யும் முயற்சி சீரியஸாக காட்டப்பட்டாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு தான் வருகிறது. அதிலும் தலையில் கேரி பேக்கை போட்டுக் கொண்டு அலைவது ரொம்பவும் அபத்தம். அந்த வகையில் மசாலா படத்தை தருகிறோம் என்று இயக்குனர் இப்படத்தை சொதப்பி வைத்திருக்கிறார்.

இப்படி பல நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் தேவையில்லாத ரொமான்ஸ், ஹீரோயிசம் இவையெல்லாம் தவிர்த்து இருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும் ஏற்கனவே மார்க்கெட் சரிந்திருந்த விஷாலை இப்படம் படுகுழியில் தள்ளி இருக்கிறது. பேசாமல் தளபதி 67 வாய்ப்புக்கு சம்மதித்திருந்தால் கூட இவருடைய மார்க்கெட் கொஞ்சம் ஸ்டடி ஆகியிருக்கும். அந்த வகையில் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது கேள்விக்குறிதான்.

Also read: தொடர்ந்து 6 பட தோல்விக்கு பின் லத்தியை சுழட்டிய விஷால்.. நேர்மையான கொம்பனாக வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

Trending News