Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மாஸ் ஹீரோ இமேஜை விட கதைக்கே முக்கியத்துவம்.. துல்கர் சல்மானின் ஸ்டைல்!

மாஸ் ஹீரோ இமேஜை விட கதைக்கே முக்கியத்துவம்.. துல்கர் சல்மானின் ஸ்டைல்!

தென்னிந்திய சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகர் துல்கர் சல்மான்.மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு,இந்தி எனப் பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.குறிப்பாக,இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும்,ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் அணுகுமுறையும் இவருக்குத் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளன.


அந்த வகையில்,’சீதா ராமம்’,’லக்கி பாஸ்கர்’போன்ற படங்கள் துல்கர் சல்மானுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன. இந்தப் படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவற்றின் வலுவான கதைக்களமும்,அதற்கேற்ற கேரக்டர் தேர்வும்தான்.வழக்கமான மாஸ் ஹீரோ பாணியில் மட்டுமே பயணிக்காமல்,கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பது இவரது சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.


தற்போது பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆகாசம் லோ ஒக்க தாரா’படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார். இதில் அறிமுக நடிகை சாத்விகா வீராவல்லி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும்,ஸ்ருதி ஹாசனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படத்தின் கதைக்கும் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையையே துல்கர் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.


தேவையற்ற பில்டப் காட்சிகள்,சண்டைகள்,நடனங்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பாமல்,ரசிகர்களைத் தியேட்டரில் உட்கார வைக்கும் வலுவான கதையம்சம் இருக்க வேண்டும் என்பதே அவரது படத் தேர்வில் முக்கியமான அம்சமாகத் தெரிகிறது.
நடிகர் என்ற முறையில் தனக்கான காட்சிகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல்,ஒட்டுமொத்தப் படத்தின் தரத்தையும் கருத்தில் கொண்டு கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்து வருகிறது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.