வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிறுத்தை ராக்கெட் ராஜாவாக மாறிய கார்த்தி.. உண்மை சம்பவம், ஜப்பான் படத்தின் கதை இதுதான்

கார்த்தி தற்போது சினிமாவில் படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கதாநாயகன் ஜெயம் ரவி என்றாலும் வந்தயத்தேவனாக வலம் வந்த கார்த்தியை தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது.

இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. மேலும் ஜப்பான் படத்தின் போஸ்டர் வெளியாகும் போது வித்தியாசமாக இருந்தது. அதாவது கார்த்தி உடம்பு முழுக்க தங்கத்தை அணிந்து வித்யாசமான லுக்கில் இருந்தார்.

Also Read : விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி.. பெரும் பிரச்சனையை கிளப்பிய நெட் பிளிக்ஸ்

அப்படி என்றால் இது எந்த மாதிரியான கதை என்று சற்று யூகிக்க முடியாமல் இருந்தது. ஜப்பான் படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதாம். அதாவது பிரபல நகை கடையில் தனது வித்தையை காட்டிய திருவாரூர் முருகனின் கதையைக் கொண்டுதான் ஜப்பான் படம் எடுக்கப்படுகிறது.

திருவாரூர் முருகன் பல மாநிலங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். 2020 ஆம் ஆண்டு உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட திருவாரூர் முருகன் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். திருட்டு சம்பவங்களில் கைதேர்ந்தவர் திருவாரூர் முருகன்.

Also Read : சிறுத்தை பட குட்டி திவ்யா ஞாபகம் இருக்கா.. நெடுநெடுவென வளர்ந்து ஹீரோயினான கார்த்திக் மகள்

அவருடைய கதையை தான் ஜப்பான் இயக்குனர் படமாக எடுக்கிறார். ஏற்கனவே சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜாவாக கார்த்தி சேட்டைத்தனமான திருட்டு வேலைகளை செய்திருப்பார். இப்போது ஜப்பான் படத்திலும் தரமான சம்பவத்தை செய்ய இருக்கிறார். ஆகையால் இந்த படத்திற்காக கார்த்தி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் சில சேட்டைத்தனமான கதாபாத்திரங்கள் கார்த்திக்கு எப்போதுமே செட்டாகும். அப்படியே திருவாரூர் முருகனின் கதையை பிரதிபலிக்காமல் சில மாற்றங்கள் இந்த படத்தில் ராஜூ முருகன் செய்துள்ளார். ஆகையால் கார்த்தி உடைய ஸ்டைலில் இந்த படம் உருவாகி இருக்கிறதாம். எனவே தீபாவளிக்கு சரவெடியாக ஜப்பான் வெடிக்க உள்ளது.

Also Read : 3வது முறையாக போட்டி போடும் சிவகார்த்திகேயன், கார்த்தி.. தீபாவளி ரிலீசுக்கு சரவெடியாக வரப்போகும் படங்கள்

Trending News