வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினி முதல் தனுஷ் வரை ரிஜெக்ட் செய்த கதை.. 4 பெரிய ஹீரோக்களை தாண்டி விக்ரமுக்கு வந்த பட வாய்ப்பு, ஜெயிப்பாரா?

Vikram Movie Update: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் 4 பேர் ரிஜெக்ட் செய்த படத்தை விக்ரம் செம போல்ட் ஆக கையில் எடுத்து நடித்து முடித்து இருக்கிறார். எப்போதுமே தன்னுடைய படங்களில் வெரைட்டி காட்டக்கூடிய விக்ரம், பக்கா ஆக்சன் படத்தின் கதையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் நடித்திருக்கிறார்.

கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சமாளித்து வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இருப்பினும் இந்த படத்திற்கு இன்னும் ஒரு சில பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த படம் நான்கு பெரிய ஹீரோக்களை தாண்டி விக்ரமிடம் வந்தது.

முதலில் சூர்யாவிற்கும் கௌதம் மேனனுக்கும் பிரச்சனை இருந்ததால், இந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் அதில் நடிக்க முடியாது என்று வேண்டவே வேண்டாம் என சொல்லிவிட்டார். அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு ஓகே சொன்னார். ஆனால் நடிக்க முடியாமல் போனது.

பிறகு உலகநாயகன் கமலஹாசன் இடம் கதை சொல்லி இருக்கிறார். இந்த கதை கமலுக்கும் பிடித்துப் போனது, ஆனால் சரியான நேரம் அமையவில்லை. தனுஷ் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டாக்கள்’ படம் அண்டர் ப்ளாப் ஆனது.

Also Read: ரஜினியை பார்க்க கூட விரும்பாத விஜய்.. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பெருசாக்கும் தளபதி

துருவ நட்சத்திரம் படம் ஹிட் ஆகுமா?

அதனால் அவர் வேண்டாம் என கௌதம் மேனன் சொல்லிவிட்டார். கடைசியாக விக்ரம் அதில் நடித்து அதுவும் வெளிவராமல் நான்கு வருடத்திற்கு மேல் இழுத்தடிக்கப்பட்டது. ஒரு வழியா பைனான்சியர் பிரச்சனை எல்லாம் முடிந்து இப்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

நாளை மறுநாள் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இந்த படம் நான்கு பெரிய ஹீரோக்களின் கைக்கு சென்று விட்டு கடைசியில் விக்ரமிடம் வந்தது. இந்தப் படத்திற்கு விக்ரம் ஓகே சொன்னது சரிதானா? துருவ நட்சத்திரம் படம் ஹிட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: தட்டு தடுமாறி ரிலீசுக்கு தயாரான துருவ நட்சத்திரம்.. முதல் விமர்சனத்தை கொடுத்து மிரட்டிய பிரபலம்

Trending News