வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலின் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்த சூப்பர் ஸ்டார்.. உண்மையை உடைத்த வாரிசு

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்த அளவிற்கு உச்சம் அடைவதற்கு படாத கஷ்டம் பட்டு இருக்கிறார். அதிலும் தன்னை ஒரு நடிகனாக அடையாளப்படுத்திக் கொள்ள ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்துள்ளார். இதைப் பற்றி கமலின் அண்ணன் மகளே உடைத்து பேசி இருக்கிறார்.

80களில் இருந்து இப்போது வரை ரஜினியுடன் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் கமலின் வீட்டு வாசலில் அவருக்காக காத்திருந்த கொடுமை எல்லாம் அரங்கேறி இருக்கிறது. ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் தான் சூப்பர் ஸ்டார் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

Also Read: நடிகைகள் என்றாலே ரஜினிக்கு ஆகாது..அயன் லேடியிடம் மட்டும் காட்டும் நெருக்கத்தை புட்டு புட்டு வைத்த சுஹாசினி

அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது கவிதாலயா நிறுவனத்திற்கு சொந்தமான காரில் தான் படத்தில் நடித்த பிரபலங்களை அழைத்து வருவார்கள். அதே கார் கமலையும் பிக்கப் பண்ண அவர் வீட்டிற்கு வந்தது. காரில் இருந்த ஸ்ரீவித்யா கமலின் வீட்டிற்கு கார் வந்ததும் உள்ளே சென்று காபி வேண்டும் என்று குடிப்பார்களாம்.

கார் வந்த பிறகுதான் கமல் எழுந்து குளித்துவிட்டு கிளம்புவாராம். அதுவரை கமல் வீட்டு வாசலிலேயே தான் ரஜினி அங்கும் இங்கமாக நடந்து கொண்டிருப்பார். அவர் கமல் வீட்டின் உள்ளே கூட போக அவ்வளவு தயங்கி இருக்கிறார். அவரை வீட்டிற்குள் வர சொல்ல கூட ஆள் இல்லை.

Also Read: அடுத்த பிரம்மாண்ட மல்டி ஸ்டார் படத்திற்கு தயாராகும் கமல்.. கூட்டணி போடும் சில்மிஷ நடிகர்

ஏனென்றால் ரஜினி அப்போது யாருக்கும் தெரியாத முகம். இருப்பினும் வாய்ப்புதான் முக்கியம் என்று கமல் கிளம்பும் வரை வீட்டு வாசலிலேயே நின்று அதன் பிறகு தான் படப்பிடிப்பிற்கு எல்லோருடனும் சென்றாராம். இதையெல்லாம் கமலின் அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இவருக்கு என்ன பெருமை என்றால் ரஜினி இப்போது என்ன தான் பெரிய நடிகராக இருந்தாலும் அவர் தன்னுடைய சித்தப்பா கமல் மற்றும் சுஹாசினியின் அப்பா ஆகியோருடன் தங்கி இருந்த வீட்டின் வாசலில் காத்திருந்துதான் படத்தில் நடித்திருக்கிறார் என பெருமை பீத்தியது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இருப்பினும் இப்படி எல்லாம் தான் ரஜினி பிரபலங்களின் மத்தியில் படிப்படியாக உயர்ந்து தற்போது அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் என்றும் சிலர் பெருமிதம் கொள்கின்றனர்.

Also Read: ரஜினி முன்னாடியே இந்த படம் ஓடாது எனக் கூறிய ராகவா லாரன்ஸ்.. கடுப்பாகி சூப்பர் ஸ்டார் எடுத்த முடிவு

Trending News