வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தளபதி மீது சூர்யா குடும்பத்திற்கு இருக்கும் ஈகோ.. இவ்வளவு பொறாமையா?. 

The Surya family’s ego on Thalapathy: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக மாஸ் கட்டிக் கொண்டிருக்கும் விஜய், தனக்கு எதிராக வரும் எல்லா முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறி செல்கிறார். இவரை போலவே சூர்யா, கார்த்தியும் தமிழ் சினிமாவில் தன்னை நிரூபிக்க பார்க்கின்றனர். சூர்யா விஜய்க்கு சரிசமமாக வளர்ந்தாலும் ஒரு கட்டத்தில் அவர் டிராக் மாறியதால் விஜய் உடன் போட்டி போட முடியவில்லை.

சூர்யா குடும்பத்தினர் விஜய்யை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். விஜய், சூர்யாவுடன் தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். சூர்யாவின் செட் தான் விஜய்யும், சூர்யா நடிக்கும் போதே தான் விஜய்யும் நடித்து படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தார்.

ஆனால் விஜய் இப்போது தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிய நடிகராக வளர்ந்து நிற்கிறார் என்று சூர்யா குடும்பத்தினர் ஆதங்கப்படுகின்றனர். இதனால் சூர்யா குடும்பத்திற்கு விஜய் மீது ஒரு விதமான ஈகோ வந்துவிட்டது.

Also read: விஜய்யை நம்பினா வேலைக்காகாது.. பெரிய திமிங்கலத்தை லாக் செய்த அட்லி- ஷாருக்கான்

யார் என காட்டிய விஜய் 

விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கூட ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், ஒரே ஒரு தல தான் என்று  சொன்னார். ஆனால் சூர்யா, கார்த்தி பற்றி எல்லாம் பெருசா பேசவில்லை. சமீபத்தில் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் அவர் டாப் ஹீரோவாக இருந்தாலும் குடும்பத்தை பார்க்கணும், தன்னை சுற்றி இருக்கிறவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யணும். 

அதுதான் தன்னுடைய வாழ்க்கையின் வெற்றி என்று கார்த்தி பெருமிதத்துடன் சொன்னார். ஒரு படத்தில் பாடல், ஃபைட் நல்லா பண்ணா போதுமா! மீதி இருக்கும் இரண்டு மணி நேர படத்தை தன்னுடைய சிறப்பான நடிப்பால் கொண்டு செல்பவர் தான் டாப் ஹீரோ என்று வெளிப்படையாக கார்த்தி கமெண்ட் செய்தார்.

எல்லாமே விஜய் மேல உள்ள ஈகோ தான். கூட்டி கழித்து பார்த்தால் விஜய் டேலண்ட்  பற்றி தான்  பேசுகிறார்கள். சூர்யா, கார்த்தி இருவரும் தங்களுக்குரிய திறமையை ஒவ்வொரு படத்திலும் காட்டுகின்றனர். ஆனால் விஜய்யும் அவர்களுக்கெல்லாம் சளைத்தவர் கிடையாது. இவர்களை எல்லாம் விட விஜய் தன்னை மாஸ் ஹீரோவாக நிரூபித்து ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Also read: ரஜினியை விட விஜய் ரசிகர்களுக்கு எதிரியாக மாறிய நடிகர்.. இதுக்கு பின்னாடி ஒரு பிளாஷ்பேக்கே இருக்கு

Trending News