வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

Rajini, Kamal: ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகர்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்கள். எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோக்களாக ரஜினி மற்றும் கமல் இருந்தனர். ஆனால் எம்ஜிஆர் அரசியலுக்கு சென்ற பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்துக் கொண்டார்.

சிவாஜி வயதான பிறகு ஹீரோக்களின் அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் ரஜினி, கமலை பொறுத்தவரையில் தற்போது வரை ஹீரோக்களாக மட்டுமே நடித்து வருகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு தற்போது வரை அந்த இடத்தை கொடுக்காமல் சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனாக வலம் வருகிறார்கள்.

Also Read : ஜெயிலர் வெற்றியால் பரபரப்பாகும் ரஜினியின் கால்ஷீட்.. 2024 பிப்ரவரிக்குள் 2 படத்தை ரிலீஸ் பண்ண போட்ட பிளான்

ஆனாலும் சில வருடங்களில் இவர்களுக்கு அடுத்த தலைமுறை இந்த இடத்திற்கு வந்து விடுவார்கள். அப்படி கணிக்கப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு தளபதி விஜய்க்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இப்போது உள்ள காலகட்டத்தை வைத்து பார்க்கும் போது விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

ஆகையால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக உலக நாயகன் கமலின் பட்டம் சூர்யாவுக்கு தான் கிடைக்க இருக்கிறது. ஏனென்றால் சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து வருகிறது.

Also Read : மூணு மாச கடன் நான்கே நாளில் திருப்பிக் கொடுத்த ரஜினி.. நீங்க கடவுளுக்கும் மேல என புகழும் பிரபலம்

சூரரை போற்று, ஜெய் பீம் என அவரது வித்தியாசமான பரிமாணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகையால் கமலின் உலக நாயகன் பட்டம் அடுத்ததாக சூர்யாவுக்கு தான் கிடைக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

லிஸ்டில் அஜித்தை இடம்பெறவில்லை என்ற கேள்வி பலருக்கும் ஏற்படக்கூடும். ஆனால் ரசிகர் கூட்டமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அஜித் கண்டிப்பாக தனக்கு பட்டமும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பார். ரசிகர்களுக்காக மட்டுமே படத்தில் நடித்து வரும் அஜித் இன்னும் சில வருடங்கள் மட்டுமே சினிமாவில் இருப்பார்.

Also Read : தனுஷிக்கு தம்பியாகும் கமலின் மகன்.. தடைபட்டு போன ஷூட்டிங், இணையும் பிரபல வில்லன்

Trending News