ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விடுதலை ரிலீஸுக்கு முன்பே வெளிவந்த சூரியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர்.. காமெடிக்கு இனி வாய்ப்பே இல்லையாம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பலரையும் மிரட்டியது. அதிலும் இதுவரை காமெடியனாக நாம் பார்த்து வந்த சூரியின் நடிப்பு ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இதுவே படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

இப்படி அனைவரின் பாராட்டு மழையிலும் நனைந்து கொண்டிருக்கும் சூரி தன்னுடைய அடுத்த பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அப்படத்திற்கு கொட்டுக்காளி என்று பெயரிடப்பட்டுள்ளது.

Also read: ஏறிய வேகத்திலேயே சறுக்கிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த எடுத்த அதிரடி முடிவு

சர்வதேச விருதுகளை வென்ற கூழாங்கல் பட புகழ் பி எஸ் வினோத் ராஜ் இயக்கும் இப்படத்தில் சூரி உடன் இணைந்து மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் நடிகை அன்னா பென் நடிக்கிறார். இதற்கான டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் சிவகார்த்திகேயன், சூரி உடன் இணைவது குறித்து தன் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் பல சேவல்கள் கூட்டாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போதே சேவல் சண்டையை மையப்படுத்தி இப்படத்தின் கதை இருக்கும் என்று புரிகிறது. அது மட்டுமல்லாமல் மதுரை வட்டாரத்தை சுற்றி இக்கதைகளம் அமையும் என்றும் தெரிகிறது. இதுவே படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.

Also read: ஆயிரக்கணக்கான பாடல்களில் இது தனித்து நிற்கும்.. மாத்தி மாத்தி புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன், இளையராஜா

தற்போது வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பை தொடர்ந்து சூரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. மேலும் விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் ஹீரோவாக கமிட்டாகி வருவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இவரை இனி மேல் காமெடி கேரக்டர்களில் பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சூரியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர்

soori-sivakarthikeyan-movie
soori-sivakarthikeyan-movie

அந்த அளவுக்கு சூரியை தேடி ஹீரோ வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். இனிமேல் கோலிவுட்டில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த வகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த கொட்டுக்காளி போஸ்டர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also read: மேடையில் வைத்து வெற்றிமாறனை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி.. வாய்ப்பு கொடுக்காததால் ஏற்பட்ட விரத்தி

Trending News