திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வனில் குந்தவை வாங்கிய மொத்த சம்பளம்.. பீல்ட் அவுட் ஆகியும் இவ்வளவு கோடியா?

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இந்தப் படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார்.

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த திரிஷா ஒரு கட்டத்திற்கு பின்பு மார்க்கெட்டை இழந்து விட்டார். தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்கப்படாததால் அக்கட தேச மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

Also Read : பொறாமையில் போட்டி போட்டு நடிக்கும் 5 ஹீரோயின்கள்.. திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற பேச்சுக்கே இடம் இல்ல

மேலும் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பின் காரணமாக இப்போது டாப் நடிகர்களின் படங்களில் மீண்டும் திரிஷா கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுமட்டும்இன்றி கமல், அஜித் போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வருகின்ற 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இதற்காக பொன்னியின் செல்வன் படக்குழு பல இடங்களுக்கு சென்று ப்ரொமோஷனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் திரிஷாவும் விதவிதமான உடைகள் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலக்கி வருகிறார்.

Also Read : குந்தவைக்கு ஏன் கல்யாணம் நடக்கல? உண்மையை புட்டு புட்டு வைக்கும் திரிஷாவின் அம்மா

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் குந்தவையாக நடித்த திரிஷா முதல் பாகத்திற்கு 2.5 கோடி சம்பளமாக பெற்றிருந்தார். முதல் பாகத்தில் திரிஷாவுக்கு பெரிய அளவில் காட்சிகள் எதுவும் இல்லை.

ஆனால் இரண்டாம் பாகத்தில் குந்தவை கதாபாத்திரம் அதிகமாக இருப்பதால் திரிஷாவுக்கு இரண்டாம் பாகத்திற்கு மட்டும் 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு மொத்தமாக 5.5 கோடி சம்பளமாக திரிஷா பெற்றுள்ளார். பீல்ட் அவுட் ஆனாலும் திரிஷாவுக்கு இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் வாயை பிழைக்கின்றனர்.

Also Read : திரிஷா இல்லைனா நயன்தாரா.. அடுத்த கதாநாயகியை லாக் செய்த மணிரத்தினம்

Trending News