வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆண்டவரால் அப்சட்டான போட்டியாளர்.. மீண்டும் பழைய எனர்ஜியுடன் கம்பேக் கொடுத்து அசத்திய ரவுடி பேபி

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஜிபி முத்து, சாந்தி, அசல், செரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இப்போது பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் மிகக் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

எல்லோரும் ஓரளவு எனர்ஜியுடன் இருந்தாலும் ஒரு போட்டியாளர் மட்டும் மிகுந்த அப்செட்டில் இருந்தார். அதாவது ஆயிஷா கடந்த இரண்டு வாரங்களாகவே மிகுந்த சோர்வுடன் காணப்படுகிறார். அவரது உடலில் ஒரு வகையான பிரச்சனை இருப்பது ஒரு பக்கம் என்றால், கமல் அவரைக் கண்டிக்கும்படியான சில விஷயங்களை கூறியிருந்தார்.

Also Read : எகிறிய சன், விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்.. நீண்ட நாட்களுக்கு பின் விட்ட இடத்தை பிடித்த பாரதிகண்ணம்மா

இதனால் தனக்கு வெளியில் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பேர் இருப்பதாக நினைத்து சோகமாகவே இருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் பழைய எனர்ஜியுடன் ஆட்டத்தை ஆட தொடங்கியுள்ளர். முதலாவதாக நேற்று சரியான காரணத்தை சொல்லி அமுதவாணன் மற்றும் ராபர்ட் மாஸ்டரை நாமினேஷனில் தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்த இன்று விக்ரமன், அமுதவானன், குவின்சி, ஆயிஷா நால்வரும் சேர்ந்து மற்ற போட்டியாளர்கள் பார்த்து மிரளும் அளவுக்கு சண்டை போடும்படி பிராங்க் செய்திருந்தார்கள். அதுமட்டுமின்றி டாஸ்கிலும் முழு ஆர்வத்துடன் ஆயிஷா பங்கு பெற்ற வருகிறார்.

Also Read : விஜய் டிவியால் சாவின் விளிம்பிற்கு செல்லும் காமெடி நடிகர்கள்.. செஞ்சாலும் குத்தம் செயலானாலும் குத்தமா!

முன்பு எதுக்கெடுத்தாலும் கோபப்படும் ஆயிஷா தற்போது அசீம் சொல்வதை நிதானமாக கேட்டு அதன்படி செயல்படுகிறார். ஒருவேளை தனக்கு அந்த விஷயம் பிடிக்கவில்லை என்றாலும் வேறு ஏதும் கருத்து சொல்லாமல் அந்த இடத்தில் இருந்த சென்று விடுகிறார்.

தற்போது ரவுடி பேபி பழையபடி அதே கலகலப்புடன் கம்பேக் கொடுத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனிமே தான் இந்த ரவுடி பேபி சத்யாவோட ஆட்டம் தொடங்க உள்ளது. ஆகையால் பிக் பாஸ் வீடு இப்போதுதான் களைகட்டி உள்ளது.

Also Read : பணம் பாதாளம் வரை செல்லும்.. விஜய் டிவியின் பித்தலாட்டத்தை வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி

Trending News