திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

3வது இடத்திற்கு போட்டி போட்ட கார்த்திக்.. கமல், ரஜினியை முந்த செய்த வேலை

Actor Karthik: நவரச நாயகன் கார்த்திக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். ஆரம்பத்தில் இருந்து ஒரு ஸ்டைலான ஹீரோவாக தன்னை ரசிகர்களிடம் காட்டி வந்தார். ஆனாலும் அவருக்கு முன்னதாக பல நடிகர்கள் வரிசை கட்டி நின்றனர். அதுவும் முதல் இரண்டு இடத்தில் ரஜினி மற்றும் கமல் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ரஜினி, கமலை முந்த வேண்டும் என கார்த்திக் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் அது முடியவில்லை என்றாலும் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதற்காக அவர் தனது இமேஜை விட்டு இறங்கி முக்கிய முடிவை சரியான நேரத்தில் எடுத்தது தான் காரணம்.

Also Read : வில்லனாய் கலக்கிய ஐந்து 80ஸ் ஹீரோக்கள்.. தனுஷிற்கு தண்ணி காட்டிய கார்த்திக்

அதாவது தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது. இதனால் கமல், ரஜினி போன்ற நடிகர்கள் கூட கிராமத்து சப்ஜெக்ட் கதைகளில் நடித்து கலக்க ஆரம்பித்தனர். ஆனால் கார்த்திக்கு இது செட்டாகுமா என்ற குழப்பம் இருந்தது.

ஆனாலும் இவர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கார்த்தியும் கிராமத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு கார்த்தி கிராமத்தில் கதையில் நடித்த அனைத்து படங்களுமே வேற லெவலில் ஹிட் ஆனது. அதன் பிறகு அதே மாதிரியான சப்ஜெக்ட் தான் அவரை நாடி வந்தது.

Also Read : ராம்கியை கண்ணீர் விட வைத்த நிரோஷாவின் 5 ஹாட் பாடல்கள்.. கார்த்திக்கும், கமலும் அடித்த லூட்டிகள்

அந்த வகையில் பாண்டிய நாட்டுத் தங்கம், வருஷம் 16, பொன்னுமணி என அடுத்தடுத்து கிராமத்து படங்கள் நடித்து பட்டையை கிளப்பினார். இதனால் கார்த்திக் உடன் இருந்த சக நடிகர்கள் எல்லோருமே பின்னுக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு மூன்றாவது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

சில வருடங்களுக்கு பின்பு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கார்த்திக் சமீபத்தில் ரீ என்ட்ரி கொடுத்து வில்லனாக கலக்கி வந்தார். ஆனால் இப்போது அவரது காலில் உள்ள பிரச்சனை காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

Also Read : மாப்பிள்ளை கெட்டபில் ஷூட்டிங் வந்த கார்த்திக்.. இயக்குனர் கொடுத்த பல்பால் காண்டான நவரச நாயகன்

Trending News