Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மீண்டும் பண்டோரா உலகம்..‘அவதார் 4’, ‘அவதார் 5’ ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!

மீண்டும் பண்டோரா உலகம்..‘அவதார் 4’, ‘அவதார் 5’ ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!

உலக சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படத் தொடர்களில் ஒன்று ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’.பிரம்மாண்டமான காட்சிகள்,டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பண்டோரா உலகத்தின் வித்தியாசமான பின்னணி என ஒவ்வொரு பாகத்திலும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்து வருகிறது இந்தப்படம்.இந்நிலையில், அடுத்தடுத்த பாகங்களான‘அவதார் 4’ மற்றும்‘அவதார் 5’படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.


டிஸ்னி நிறுவனம் தனது வரவிருக்கும் படங்களின் ரீலிஸ் பட்டியலில்‘அவதார் 4’ படத்தையும் இடம்பெறச் செய்துள்ளது.அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற டிஸ்னியின் நிகழ்வில் இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி,’அவதார் 4’ படம் 2029ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக‘அவதார் 5’படம் 2031ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அவதார் இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ‘அவதார் 4’ படத்தின் சில சீன்கள் முந்தைய பாகங்களின் படப்பிடிப்பின்போதே படமாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக, சல்லி குடும்பத்தின் இளைய உறுப்பினர்களைக் கொண்டு சில சீன்கள் படமாக்கப்பட்டுள்ளன.மேலும், நான்காம் பாகத்தில் சுமார் ஆறு ஆண்டுகள் கால இடைவெளியுடன் கதை நகரும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.


இருப்பினும், இந்தப் படங்களின் புரொடக்ஷன் செலவு மற்றும்டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் பங்களிப்பு குறித்த சில கேள்விகள் தொடர்ந்து நிலவுகின்றன.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரிலீஸ் தேதிகள் மாற்றமின்றி தொடருமா?என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் பண்டோரா உலகத்திற்குச் செல்ல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.