வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட விஜய் டிவி.. பற்றி எரியும் கள்ளக்காதல் விவகாரம்

விஜய் டிவி என்றாலே சர்ச்சை தான் என்று சொல்லும் அளவுக்கு அந்த சேனல் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளது. அதிலும் விஜய் டிவியின் பிரபலங்கள் தான் அதிக அளவு பிரச்சனைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அதெல்லாம் ரொம்பவும் சாதாரணமான பிரச்சனைகளாக மட்டும் தான் இருக்கும்.

ஆனால் இப்போது விஜய் டிவியே ஆடிப் போகும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக செல்லம்மா என்ற ஒரு புது சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த சீரியலில் ஹீரோவாக நடிப்பவர்தான் அர்ணவ். ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருக்கும் இவர் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read : புத்தம்புது சன் டிவி சீரியலால் விரட்டியடிக்கப்பட்ட விஜய் டிவி.. இணையத்தைக் கலக்கிய டிஆர்பி ரேட்டிங்!

சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த திருமணம் தற்போது தான் மீடியாவிற்கு தெரிய வந்துள்ளது. சன் டிவி செவ்வந்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் திவ்யா தற்போது தன் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் ஒன்று அளித்துள்ளார். இதற்கு செல்லம்மா சீரியல் ஹீரோயின் தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு குழந்தைக்கு அம்மாவாக அதில் நடித்து வரும் அன்சிதா அதே சீரியலில் ஹீரோவாக நடிக்கும் அர்ணவ் உடன் நெருக்கமாக பழகி வருகிறாராம். இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட திவ்யா அவரிடம் நியாயம் கேட்க போனபோது அவரின் கண் முன்பே அன்சிதா அர்ணவுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கர்ப்பமாக இருக்கும் திவ்யாவின் வயிற்றின் மீது தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசி இருக்கிறார்.

Also Read : யாராச்சும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா.. மகா மட்டமாக போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்

மேலும் உன் கருவில் இருக்கும் குழந்தை கலைந்து விடும் என்றெல்லாம் சாபமிட்டு இருக்கிறார். இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான் தற்போது என்னை தவிர்த்து விட்டு என் கணவர் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார் என்று திவ்யா கண்ணீர் மல்க மீடியாவில் பரபரப்பு பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்த விவகாரம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையானதை அடுத்து அர்ணவ் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்னும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்வால் விஜய் டிவி பெருத்த அவமானத்தையும் சந்தித்துள்ளது. இதுபோன்று ஒழுக்கக்கேடாக இருக்கும் நடிகர்களை உங்கள் சீரியலில் நடிக்க வைப்பீர்களா என்று விஜய் டிவிக்கு எதிராக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட இருவரையும் சீரியலை விட்டு தூக்கும் முயற்சியில் விஜய் டிவி இருக்கிறது.

Also Read : பிக்பாஸ் மூலம் கிடைத்த ஜாக்பாட்.. சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

Trending News