47 அவார்டை குவித்த என் படத்தை பாராட்ட யாருமில்லை.. சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக தாக்கிய தயாரிப்பாளர்

சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படம் ஒன்று சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறது. ஆனால் பல பிரபலங்களின் படங்கள் வெளியான பிறகு கூப்பிட்டு பாராட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பற்றி சுத்தமாகவே கண்டு கொள்ளவில்லை என்றும் பிரபல தயாரிப்பாளர் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஜோசப் என்ற திரைப்படத்தை தமிழில் விசித்திரன் என்று ரீமேக் செய்யப்பட்டு கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

Also Read: பாலா கூட்டணியில் RK சுரேஷ் மிரட்டும் விசித்திரன் பட டிரைலர்.. ப்ளூ சட்டை மாறனுக்கு விட்ட சவால் ஜெயிக்குமா!

படத்தை பத்மகுமார் இயக்கினார். இந்தப் படத்தை இயக்குனர் பாலா தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்கு இதுவரை சர்வதேச அளவில் 47 விருதுகள் கிடைத்திருக்கிறது. போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்த ஆர்கே சுரேஷ் அவர்களை கூப்பிட்டு வாழ்த்தி உள்ளனர்.

ஆனால் அவருக்கு பெரிய வருத்தம் என்னவென்றால், தமிழில் இருந்து எந்த ஒரு கலைஞரும் கூப்பிட்டு வாழ்த்தவில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆதங்கத்துடன் பேசி உள்ளார். ஆனால் ரஜினி, கன்னட திரைப்படம் ஆன காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷிப் செட்டி மற்றும் தமிழ் திரைப்படமான லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரை வீட்டிற்க்கே அழைத்து பாராட்டினார்.

Also Read: RK சுரேஷின் மலையாள ரீமேக்கான விசித்திரன்.. எப்படி இருக்கு தேறுமா தேறாதா.?

அவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கினார். இதைப் போன்று தான் கமலும் நல்ல படங்களை கூப்பிட்டு பாராட்டுவார். ஆனால் தமிழில் ஒரு படத்திற்கு 47 நேஷனல் அவார்ட் கிடைத்தும் அந்தப் படத்தைப் பற்றி துளி கூட கமலும், ரஜினியும் கண்டுகொள்ளவில்லை என்று குத்தி பேசி இருக்கிறார் ஆர்கே சுரேஷ்.

ஒருவேளை கமல் மற்றும் ரஜினிக்கு இந்த படம் நல்லா இல்லை என்ற எண்ணம் தோன்றி இருக்கலாம். அதனால் அவர்கள் இப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதை புரிந்து கொள்ளாமல் ஆர்கே சுரேஷ் தன்னை அழைத்துப் பாராட்டவில்லை என்ற கடுப்பில் காரசாரமான பேட்டிகளை அளித்து வருகிறார்.

Also Read: தியேட்டரை வெறுத்து இந்த வாரம் OTT-யை குறிவைக்கும் 4 படங்கள்.. பாலா சார் நீங்களே இப்படி பண்ணலாமா!