ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வேள்பாரியில் சூர்யா இல்லை.. முரட்டுத்தனமான ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் ஷங்கர்

சமீபகாலமாக நாவல்களை படமாக இயக்க இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு மணிரத்தினம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை எடுத்திருந்தார். முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

மணிரத்தினத்தைப் போல இயக்குனர் ஷங்கரும் வேள்பாரி நாவலை படமாக எடுக்க எண்ணினார். சு வெங்கடேசன் எழுதிய இந்த நாவலை படமாக்க ஷங்கருக்கு மிகுந்த ஆசை உள்ளது. இப்போது ஷங்கர் கமலின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் 15 வது படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுமே இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி உள்ளது.

Also Read : பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2.. கண்டம் விட்டு கண்டம் போகும் கமல், ஷங்கர்

ஆகையால் இந்த படங்களுக்குப் பிறகு ஷங்கர் வேள்பாரி படத்தை எடுக்க உள்ளார். மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தில் சூர்யா பாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ரன்வீர் சிங் போன்ற ஹீரோக்களின் பெயரும் இதில் அடிபட்டது.

ஆனால் ஷங்கர் முரட்டுத்தனமான ஹீரோ ஒருவருக்கு ஸ்கெட்ச் போட்டு உள்ளார். அதாவது கன்னட மொழியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற படம் கே ஜி எஃப். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த யாஷ் வேள்பாரி படத்தில் நடிக்க உள்ளாராம்.

Also Read : ஷங்கரின் 4 படங்களை ரிஜெக்ட் செய்த அஜித்.. அவர் சவகாசமே வேண்டாம் என்பதற்கு இது தான் காரணம்

இந்த கதாபாத்திரத்திற்கு இவர் கனகச்சிதமாக பொருந்துவார் என ஷங்கர் தேர்வு செய்துள்ளார். மேலும் வேள்பாரியின் கதை அனைவருக்கும் ரொம்ப பிடித்து போய் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூர்யா நடிக்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் சூர்யா 42 படத்திற்காக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் யாஷ் தமிழ் நாவலின் கதையை கொண்டு எடுக்கும் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தியால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இந்த படத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Also Read : அதிக செலவு செய்து கே.டி.குஞ்சுமோனுக்கு ப்ளாப் ஆன 5 படங்கள்..ஷங்கரை வளர்த்து விட்டவருக்கு இப்படி ஒரு நிலைமையா.

Trending News