வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

காமெடியில் பட்டையை கிளப்பிய 5 நடிகைகள்.. கத்துக்கொடுத்த குருவையே ஹீரோயின் ஆக்கிய கமல்

5 Actresses Rocked In Comedy:  என்னதான் ஆக்சன், ஹாரர் படங்களுக்கு வரவேற்பு இருந்தாலும் முழு நீள நகைச்சுவை படங்களுக்கு ஒரு தனி மவுசு இருக்கிறது. அதிலும் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயினும் காமெடியில் கலக்கினார்கள் என்றால் சொல்லவா வேண்டும். அப்படி நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய ஐந்து நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

சௌகார் ஜானகி: பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த படம் தான் தில்லுமுல்லு. இந்த படத்தில் ரஜினி பொய் மேல் பொய் சொல்லி திண்டாடுவார். பயங்கர காமெடி அலப்பறையாக இருக்கும் இந்த படத்தில் அவருக்கு இணையாக சௌகார் ஜானகியும் கலக்கி இருப்பார்.

ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வரும் அவர் தேங்காய் சீனிவாசனிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என அடுக்கடுக்காக பொய் சொல்வார். இப்படியாக வெளிவந்த அந்த படத்தில் சௌகார் ஜானகியின் நடிப்பு இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.

ஊர்வசி: சாதாரணமாகவே இவரின் நடிப்பு நகைச்சுவை கலந்து தான் இருக்கும். அதிலும் கமல் தயாரிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த மகளிர் மட்டும் படத்தில் ஊர்வசி வேற லெவலில் கலக்கியிருப்பார். அதில் சபல புத்தி மேனேஜரிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபடும் இவர் ரேவதி, ரோகிணி உடன் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

Also read: பொங்கலுக்கு மோதப் போகும் 8 புது படங்கள்.. டிஆர்பிக்காக அடித்துக் கொள்ளும் நான்கு சேனல்கள்

ரேவதி: 80 காலகட்ட ஹீரோயின் ஆன இவர் அரங்கேற்ற வேளை, ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார். அதில் பிரபுவுடன் சேர்ந்து அரங்கேற்ற வேளை படத்தில் இவர் செய்யும் தில்லுமுல்லு நல்ல காமெடியாக இருக்கும். அதில் விகே ராமசாமியும் இவர்களுடன் கூட்டு சேர்ந்து லூட்டி அடிப்பார். அதனாலயே இப்படம் ஒரு தனி வரவேற்பை பெற்றது.

மனோரமா: காமெடியில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்ற ஆச்சி எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் இப்போது நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய நகைச்சுவை காலம் கடந்தும் அழியாமல் இருக்கிறது. அந்த வகையில் இவர் நடித்த நடிகன், பாட்டி சொல்லை தட்டாதே, சம்சாரம் அது மின்சாரம் போன்ற பல படங்கள் இவருடைய காமெடிக்கு அடையாளமாக இருக்கிறது.

Also read: குடும்ப குத்து விளக்கு கேரக்டருக்கு மட்டும் செட் ஆகும் 5 நடிகைகள்.. சிரிப்பிலும் நடிப்பிலும் கொள்ளை அடித்த சாய்

கோவை சரளா: மனோரமாவின் இடத்தை பூர்த்தி செய்த ஒரே நடிகை இவர்தான். அதில் வடிவேலுவை இவர் பறந்து பறந்து அடிக்கும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். அப்படி காமெடியில் கலக்கிய இவரை கமல் இமேஜ் பார்க்காமல் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

அந்த வகையில் சதிலீலாவதி படத்தில் இவர் உலக நாயகனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதில் கோயம்புத்தூர் பாஷையை கமலுக்கு சொல்லிக் கொடுத்த பெருமையும் இவருக்கு இருக்கிறது. இப்படி கத்துக்கொடுத்த குருவையே தனக்கு ஜோடியாக்கி அதில் வெற்றியும் கண்டார் ஆண்டவர்.

Trending News