திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்த 5 காமெடி நடிகர்கள்.. சைடு ரோலுக்கு எண்டு கார்டு போட்ட சந்தானம்

பொதுவாக சினிமாவில் காமெடி காட்சிகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். ஹீரோக்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த பல காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் சில காலங்களுக்குப் பிறகு அந்த காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாக மாறினார்கள். அப்படி காமெடி நடிகர்களாக இருந்து ஹீரோவாக மாறிய ஐந்து நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

சந்தானம்: தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் இவர் தற்போது தோல்வி படங்களை கொடுத்தாலும் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

வடிவேலு: இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மிகவும் எதார்த்தமாக நகைச்சுவை செய்து பலரையும் ரசிக்க வைத்த இவர் தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து மக்களும் இவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர்.

யோகி பாபு: தற்போதைய தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத காமெடி நடிகர் என்றால் அது இவர் மட்டும்தான். அந்த அளவுக்கு இவரின் கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கிறது. காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவர் கதையின் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த கூர்கா, மண்டேலா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சூரி: பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவரின் காமெடி காட்சிகள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். ஒரு காமெடியனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் சூரி தற்போது விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன்: இவர் இப்போதைய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. மேலும் இவர் ஒரு ஹீரோவாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

ஆனால் இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் ஒரு காமெடி நடிகராக தான் பார்க்கப்பட்டார். அதாவது தனுஷின் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் இவர் காமெடி கேரக்டர் தான் செய்திருந்தார். இதனால் இவர் ஒரு காமெடி நடிகராக தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பலரும் வியக்கும் அளவிற்கு முன்னணி ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

Trending News