திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உதவி இயக்குனராக பணியாற்றாமலே மிரட்டிய 6 இயக்குனர்கள்.. சாதித்துக் காட்டிய லோகேஷ்

சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் உதவி இயக்குனர்களாக இருந்து தொழில் நுணுக்கங்களைப் பற்றி தெரிந்த பிறகே இயக்குநராக அறிமுகம் ஆவார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் உதவி இயக்குனராக பணியாற்றாமலே இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி சாதித்துக் காட்டிய சில இயக்குனர்களை பற்றி இங்கு காண்போம்.

பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிகப்பு, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் பாலசந்தர். இப்போது முன்னணி நாயகரகளாக இருக்கும் கமல், ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இவர்தான் மானசீக குரு. தன்னுடைய தரமான படைப்புகளுக்காக ஏகப்பட்ட விருதுகளை வாங்கி இருக்கும் இவர் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை.

பாலுமகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராக ஏராளமான வெற்றி திரைப்படங்களில் பணியாற்றி இருக்கும் இவர் மூன்றாம் பிறை, மறுபடியும் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து இவர் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கி சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றாமலேயே இயக்குனராக பல படைப்புகளை கொடுத்திருக்கிறார்.

மணிரத்னம் சமூக கருத்துக் கொண்ட பல திரைப்படங்களை இயக்கி இருக்கும் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இவர் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது கிடையாது.

கார்த்திக் சுப்புராஜ் குறும்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் பீட்சா, திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் இறைவி, பேட்ட உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இளம் வயதிலேயே முன்னணி இயக்குனர் அந்தஸ்தைப் பெற்றுள்ள இவர் இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது கிடையாது.

லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கும் லோகேஷ் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இருந்தது இல்லை. இருப்பினும் இவருடைய மிரட்டலான ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் இவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நலன் குமாரசாமி சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் காதலும் கடந்து போகும், குட்டி ஸ்டோரி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரும் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்தது கிடையாது.

Trending News