செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசுகளை சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்த 5 அப்பாக்கள்.. வயிற்றில் நெருப்புடன் இருக்கும் ஷங்கர்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவாக களம் இறங்குவது புதிதல்ல. சிவாஜி, முத்துராமன் காலத்திலிருந்தே வாரிசு நடிகர்களின் வரவு தமிழ் சினிமாவில் அதிகமாக தான் இருக்கிறது. மகன்களை சினிமாவில் நடிக்க அனுமதிக்கும் பிரபலங்கள் தங்கள் மகள்களை மட்டும் அனுமதிப்பது கிடையாது.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் உட்பட பல வாரிசு நடிகைகள் சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி சில பிரபலங்கள் தங்கள் மகளை நடிக்க வைக்க விரும்பினாலும் பலருக்கு மகளை நடிக்க வைக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும் மகள்களின் ஆசைக்காக இறங்கி வந்த ஐந்து அப்பாக்களை பற்றி இங்கு காண்போம்.

ஷங்கர்: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் தற்போது விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களின் மனதில் மிக எளிதாக இடம் பிடித்து விட்டார். ஆனால் உண்மையில் சங்கருக்கு தன் மகளை நடிக்க வைக்க விருப்பமே கிடையாது.

டாக்டருக்கு படித்திருக்கும் தன்னுடைய மகள் அந்த துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. ஆனால் அதிதியின் விருப்பத்திற்காக ஷங்கர் அவரை சினிமாவில் நடிக்க அனுமதித்துள்ளார். இருப்பினும் அவர் தன் மகளை நினைத்து வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் திரிகிறாராம்.

Also read: ஷங்கரின் வாரிசு என்பதால் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?. அருண் விஜய்யின் பதில்

சரத்குமார்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த இவர் தற்போது வில்லி, குணச்சித்திரம் போன்ற பல கேரக்டர்களில் தைரியமாக நடித்து வருகிறார்.

ஆனால் சரத்குமாருக்கு தன்மகள் சினிமாவில் நடிப்பதில் கொஞ்சமும் விருப்பமே கிடையாது. தன் மகளை குடும்பம், குழந்தை என்று பார்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. ஆனால் வரலட்சுமி தான் பிடிவாதமாக இந்த துறையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அர்ஜுன்: ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு இப்போதும் கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சில வருட இடைவெளியில் கன்னட திரைப்படத்தில் நடித்த அவர் தற்போது வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆரம்பத்தில் அவருடைய இந்த ஆசைக்கு அர்ஜுன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் விடாப்பிடியாக இருந்த ஐஸ்வர்யா நடிகையாக மாறினார். இருப்பினும் தமிழ் ரசிகர்கள் மனதில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை.

Also read: அர்ஜூனின் இளைய மகளா இது.? அக்காவை மிஞ்சும் அடுத்த ஹீரோயின் ரெடி

அருண் பாண்டியன்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்று பிரபலமாக இருக்கும் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தும்பா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தன் அப்பாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் தன்னுடைய ஆசைக்காக நடிக்க வந்த அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர் தன் அப்பாவுடன் இணைந்து பிசினஸை கவனித்து வருகிறார்.

பாக்யராஜ்: தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகளும் இருக்கிறார். இவர் தன் அப்பாவின் இயக்கத்தில் பாரிஜாதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். இதற்கு காதல் தோல்வியும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: டாப் ஹீரோவுக்கு வலைவிரிக்கும் அதிதி சங்கர்.. அம்மணி உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லையா!

Trending News