திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மறு ஒளிபரப்பில் மண்ணை கவ்விய 6 மெகா சீரியல்கள்.. எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த மரண அடி

தற்போது முன்னணியில் இருக்கும் பல சேனல்களும் ரசிகர்களை கவர்வதற்காக பல ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என்று களத்தில் குதித்து வருகின்றன. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரையில் இல்லத்தரசிகளின் ஒரு சாய்ஸாக இருந்தது சீரியல்கள் மட்டும்தான்.

அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பலரும் அடிமையாக இருந்த காலமும் உண்டு. அந்த வரிசையில் பல சீரியல்கள் இப்போதும் ரசிகர்களின் பேவரைட் ஆக இருக்கிறது. அதை தெரிந்து கொண்ட சேனல்கள் பல வருடங்களுக்கு முன்பு சக்கை போடு போட்ட சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது.

ஆனால் அந்த சீரியல்கள் அனைத்திற்கும் அப்போது கிடைத்த வரவேற்பு தற்போது கிடைக்கவில்லை. இதனால் அந்த சீரியல்கள் அனைத்தும் மறு ஒளிபரப்பில் மண்ணைக் கவ்வியது. இதன் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த அந்தச் சேனல்களுக்கு மரண அடி கிடைத்துள்ளது. அந்த சீரியல்கள் பற்றி இங்கு காண்போம்.

மெட்டி ஒலி சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களிலேயே அதிக வரவேற்பை பெற்ற ஒரே சீரியல் இதுவாக மட்டும்தான் இருக்கமுடியும். அதிலும் அந்த டைட்டில் பாடல்களுக்காகவே காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம். ஐந்து மகள்களை பெற்ற ஒரு அப்பாவின் எதிர்பார்ப்பு, துயரம் போன்று அனைத்தையும் இந்த சீரியல் காட்டியது.

இந்த தொடரின் இயக்குநர் திருமுருகன் தனது சொந்தப் பெயரையே மறக்கும் அளவிற்கு கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இல்லத்தரசிகள் முதல் அனைவரையும் கலங்கடித்த இந்த சீரியல் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த சீரியலுக்கு அப்போது கிடைத்த வரவேற்பு தற்போது கிடைக்கவில்லை.

சித்தி பெரிய திரையில் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ராதிகா இந்த சித்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி வைத்தார். அவருக்கே உரிய பாணியில் அதிரடியான நடிப்பும், ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

கிட்டத்தட்ட ரசிகர்கள் பலரும் இந்த சீரியலுக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். அதன்பிறகு ராதிகா சன் டிவியில் பல சீரியல்களில் நடித்தார். தற்போது இந்த சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

கோலங்கள் நடிகை தேவயானியின் நடிப்பில் வெளிவந்த இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. அபிநயா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவருடைய நடிப்பிற்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக கிடைத்தது. பெரிய திரையில் அவருக்கு கிடைத்த புகழை விட இந்த சீரியலின் மூலம் தேவயானிக்கு அதிகம் பெயரும், புகழும் கிடைத்தது. தற்போது இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தாலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

திருமதி செல்வம் சஞ்சீவ் மற்றும் அபிதா நடிப்பில் ஒளிபரப்பான இந்த சீரியல் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. படிப்பறிவு இல்லாத ஒரு பெண் தன் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறார் என்பதைப்பற்றி காட்டப்பட்ட இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தற்போது மீண்டும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கிறது.

தென்றல் தீபக் மற்றும் ஸ்ருதி இருவரும் இந்த சீரியலில் தமிழ், துளசி என்ற கேரக்டரில் நடித்து இருப்பார்கள். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு அவர்களின் கெமிஸ்ட்ரி இந்த சீரியலில் பயங்கரமாக இருந்தது. காமெடி, ரொமான்ஸ், கலாட்டா என்று அனைத்தும் கலந்த கலவையாக இருந்த இந்த சீரியல் தற்போது மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் இந்த சீரியலுக்கு தற்போது பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

ஆனந்தம் நடிகை சுகன்யாவின் நடிப்பில் வெளிவந்த இந்தத் சீரியல் பல வருடங்கள் ஓடி சாதனை படைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் இருக்கிறது. தற்போது இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

Trending News