செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வளர முடியாமல் காணாமல் போன 6 இளம் நடிகைகள்.. கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு கிடைக்காத அஞ்சலி

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்னதான் திறமையாக நடித்தாலும் அது ஒரு காலம் வரை தான் அவர்களுக்கு கை கொடுக்கிறது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போன சில நடிகைகள் கவர்ச்சி களத்தில் குதித்து விடுகின்றனர்.

ஆனால் அதுவும் சிலருக்கு ஒர்க் அவுட் ஆகாமல் சினிமாவை விட்டே காணாமல் போய்விடுகின்றனர். அப்படி சினிமா வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை கையிலெடுத்தும் பலனளிக்காமல் போன 6 இளம் நாயகிகளை பற்றி இங்கு காண்போம்.

கயல் ஆனந்தி: கயல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் குடும்ப பாங்கான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அப்படி இவர் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் இவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் அமையவில்லை. அதனால் கிளாமர் ரூட்டுக்கு மாற முடிவெடுத்த இவருக்கு அப்போதும் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

லட்சுமி மேனன்: கும்கி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் அதைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் சில காலங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைக்காத இவர் கிளாமராகவும் நடித்து பார்த்தார். ஆனால் அது அவருக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் தற்போது வாய்ப்புகள் இன்றி இருக்கிறார்.

நித்யா மேனன்: தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்று பெயரெடுத்த இவருக்கு தற்போது வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. விஜய், ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது கவர்ச்சியாக நடிக்கவும் சம்மதம் தெரிவிக்கிறார். அப்போதும் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அஞ்சலி: கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. எந்த கேரக்டராக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமை இவருக்கு உண்டு. பட வாய்ப்புகளுக்காக இவர் கொஞ்சம் கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் புதுப் புது நடிகைகளின் வரவால் தற்போது அஞ்சலிக்கும் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

வரலட்சுமி சரத்குமார்: போடா போடி திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். முதல் படத்திலேயே அதிக கிளாமராக நடித்து பலரையும் அதிர்ச்சி ஆக்கினார். ஆனால் அதன் பிறகு இவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

இதனால் அவர் வில்லியாகவும் நடித்து பார்த்தார். அப்போதும் தமிழில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் தற்போது வரலட்சுமி தெலுங்கு பக்கம் தாவி விட்டார். அங்கு அவர் கவர்ச்சி வேடத்தில் கலக்கி வருவதாக கூறப்படுகிறது.

சுருதி ஹாசன்: உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிக்க வந்த வேகத்திலேயே சூர்யா, விஷால், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் தற்போது அவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர் தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Trending News