திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

துவண்டு போன சீரியல்களை தூக்கி நிறுத்தும் சன் டிவி.. கலாநிதி செய்த தந்திரத்தால் அதிரடி காட்டப் போகும் டிஆர்பி ரேட்டிங்

Sun Tv Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பல வருஷமாக கெத்து காட்டி வருகிறது. அதற்கு காரணம் அதில் வரும் நாடகங்களும் கதைகளும் மக்களை கவர்ந்து இருப்பதாலும் மக்களுக்கு பிடித்த மாதிரியான விஷயங்களை சீரியல் மூலம் கொண்டு வருவதன் மூலமும் தொடர்ந்து சன் டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று வருகிறது.

முக்கியமாக சில சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றால் அதை அஞ்சு வருஷமாக கொண்டு வந்து விடுவார்கள். அதே நேரத்தில் ஒரு சீரியல் பிடிக்கவில்லை என்றால் டிஆர்பி ரேட்டிங் இல் அடி வாங்கிவிட்டது என்று தெரிந்ததும் புது சீரியலாக இருந்தாலும் அதை அவசர அவசரமாக முடித்து விடுவார்கள்.

அந்த வகையில் துவண்டு போன சீரியல்களை எல்லாம் சரி செய்யும் விதமாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்தம்புது சீரியல்களை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மட்டுமே மல்லி, மருமகள், ரஞ்சினி, மூன்று முடிச்சு, அன்னம் போன்ற பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே மாதிரி இந்த காலத்திலும் புராணக் கதைகளுக்கு எப்பொழுதும் வரவேற்பு உண்டு என்று சொல்வதற்கு ஏற்ப இராமாயணம் சீரியலும் தினமும் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கும் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல புள்ளிகள் கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து சன் டிவி சீரியலை தவிர்த்து மக்கள் வேறு எந்த சேனலில் உள்ள நாடகத்தையும் பார்த்து திசை திருப்பி விடக்கூடாது என்பதற்காக கலாநிதி மாறன் தற்போது தந்திரமாகவும் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் 2 மற்றும் ரோஜா 2 சீரியலும் ஒளிபரப்பாக போகிறது. இது மட்டும் இல்லாமல் இன்னொரு தகவலும் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் எப்படி திருசெல்வத்திடம் பேசி எதிர்நீச்சல் 2 க்கு வலை விரித்தாரோ, அதே மாதிரி திருமுருகன் இயக்கிய பல சீரியல்கள் மக்களிடத்தில் ஹிட் ஆகியிருக்கிறது.

அதனால் திருமுருகனிடமும் அவருடைய ஏதாவது ஒரு சீரியலின் இரண்டாம் பாகத்தை கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி எதிர்நீச்சல் நாடகத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்தமோ அதே மாதிரி திருமுருகனின் சீரியலும் கூடிய விரைவில் வரப்போகிறது.

Trending News