சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இப்பவும் விஜயகாந்தை கொண்டாட காரணம்.. உண்மையான நாட்டாமை இவர்தான்

நாட்டாமை என்று சொன்னாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் விஜயகுமார் தான். நாட்டாமை திரைப்படத்தில் தலையில் குடுமியுடன், வெற்றிலையை வாயில் போட்டு கொண்டு மீசையை முறுக்கி விட்டு கோயம்புத்தூர் தமிழில் அவர் தீர்ப்பு சொல்லும் அழகே தனிதான்.

இவரையே மிஞ்சும் அளவுக்கு நிஜ வாழ்வில் ஒரு நாட்டாமை இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல கேப்டன் விஜயகாந்த் தான். இப்பொழுது நடிகர் சங்கம் பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு அணிகளாக பிரிந்து ஆளுக்கு ஒரு பக்கம் நிற்கிறது.

பாண்டவர் அணியில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். அதேபோல் பாக்யராஜ், ஐசரி கணேஷ் போன்றவர்களும் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இப்படி நடிகர் சங்கம் இரு துருவமாக பிளவுபட்டு இருப்பதால் உறுப்பினராக இருக்கும் பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் எதற்கெடுத்தாலும் கோர்ட், கேஸ் என்று அவர்கள் செல்வது நடிகர் சங்கத்தின் மீதான மதிப்பையும் குறைத்து வருகிறது. இப்பொழுது இப்படி முட்டிக் கொண்டு இருக்கும் நடிகர் சங்கம் ஒரு காலத்தில் சொர்க்க பூமியாக இருந்தது. அந்தக் காலத்தில் நடிகர் சங்கம் மிகவும் ஒற்றுமையுடன் இருந்ததற்கு காரணம் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.

அவர் தலைவராக இருந்தபோது அனைவரும் ஒரு கூட்டுக் குடும்பம் போல் இருந்துள்ளனர். அவர்களுக்குள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விஜயகாந்த் அங்கேயே தீர்த்து விடுவாராம். அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அன்பு காட்டி, கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய இடத்தில் கடுமையாக பேசியும் அந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்து விடுவாராம். இதனால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்ததாம்.

அதோடு பல துணை நடிகர்களுக்கும் இவர் பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார். இப்பொழுது இருக்கும் நடிகர்களை பார்ப்பதே மிகவும் அரிதாகி போன நிலையில் விஜயகாந்தை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற ஒரு நிலையும் அப்போது இருந்தது. யார் மனமும் கோணாமல் பல பிரச்சினைகளையும் அவர் முடித்து வைத்து உள்ளார்.

இதனால் தான் அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். சினிமாவிற்கு நாட்டாமையாக ஒரு விஜயகுமாரை போல நடிகர் சங்கத்திற்கு ஒரு நாட்டாமையாக விஜயகாந்த் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

Trending News