வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டிஆர்பியில் முதல் 5 இடத்தை பிடித்த சேனல்கள்.. பல ஆண்டுகளாக அசுர பலத்தை காட்டி வரும் ஒரே சேனல்

சின்னத்திரையை பொறுத்தவரை இப்போது பல புதுப்புது சேனல்கள் உருவாகி வருகிறது. அதனால் இந்த போட்டியை சமாளிக்க முன்னணி சேனல்கள் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் சேனல்களின் டிஆர்பியும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் பிரபல சேனல்கள் தங்கள் டிஆர்பிஐ தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக ரியாலிட்டி ஷோ, சீரியல்கள், திரைப்படங்கள் என்று புது பாணியில் யோசிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது சின்னத்திரையில் முதல் ஐந்து இடத்தை பிடித்து டிஆர்பி யில் கெத்து காட்டும் சேனல்களைப் பற்றி இங்கு காண்போம்.

விஜய் சூப்பர்: இந்த சேனலிலும் திரைப்படங்கள் மட்டும் தான் ஒளிபரப்பாகும். அந்த வகையில் பல புது படங்களையும் ஸ்டார் விஜய் இதில் ஒளிபரப்பி வருகிறது. நேரடி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் டப்பிங் திரைப்படங்களும் இதில் ஒளிபரப்பாகும். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் சூப்பர் தொலைக்காட்சி டிஆர்பி யில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

கே டிவி: சன் குழுமத்தின் மற்றொரு சேனலான இந்த கே டிவி வெறும் திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. இதில் ஒளிபரப்பாகும் பல திரைப்படங்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். அந்த வகையில் கே டிவியில் ஒளிபரப்பாகும் முத்து, பாட்ஷா, நாட்டாமை உள்ளிட்ட படங்களை எத்தனை முறை ஒளிபரப்பானாலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். இதன் மூலம் கே டிவி டிஆர்பியில் நான்காம் இடத்தை தக்க வைத்துள்ளது

ஜீ தமிழ்: பல நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள ஜீ தமிழ் தற்போது டிஆர்பி யில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அதிலும் இந்த சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவே இந்த சேனலின் டிஆர்பி உயர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் இல்லத்தரசிகள் ஜீ தமிழ் சீரியல்களையும் விரும்பி பார்க்கின்றனர்.

ஸ்டார் விஜய்: ரியாலிட்டி ஷோக்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஸ்டார் விஜய் தற்போது டிஆர்பி யில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் சன் டிவிக்கு அடுத்து விஜய் டிவிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இதில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் விஜய் டிவியின் டிஆர்பியும் ஏறுமுகமாகவே இருக்கிறது.

சன் டிவி: பல வருடங்களாக ரசிகர்களின் ஆதரவுடன் முதல் இடத்தில் இருக்கும் ஒரே சேனல் சன் தொலைக்காட்சி தான். தூர்தர்ஷனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மக்கள் சன் டிவி ஆரம்பிக்கப்பட்டதும் இதற்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். அந்த அளவுக்கு இதில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களும், காமெடி நிகழ்ச்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

அதிலும் சன் டிவி ஆரம்ப காலகட்டத்தில் பாட்டுக்கு பாட்டு, சப்தஸ்வரங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதைத்தொடர்ந்து தற்போது புதுப்புது படங்கள், சீரியல்கள் என்று களமிறங்கி இருக்கும் சன் டிவி டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து கெத்து காட்டி வருகிறது.

Trending News