சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரிலீசுக்கு முன்பே 100 கோடிக்கு மேல் லாபம்.. விக்ரம் பட சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தை தயாரித்து நடித்து முடித்துள்ளார். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாகிறது. கடந்த சில நாட்களாகவே விக்ரம் திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

அதிலும் படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் சாட்டிலைட் உரிமை பல கோடி மதிப்பிற்கு வியாபாரமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கமலின் நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் இப்படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. இந்த அனைத்து மொழிகளின் சாட்டிலைட் உரிமையையும் மிகப் பெரிய நெட்வொர்க்கான ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

மேலும் விக்ரம் திரைப்படத்தை ஸ்டார் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பேசி வாங்கி இருக்கிறது. ஏற்கனவே கமல் ஹாசன் ஸ்டார் நிறுவனத்தின் தமிழ் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

அதனடிப்படையில் ஸ்டார் நிறுவனத்திற்கும், கமல்ஹாசனுக்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு இருக்கிறது. அதன் காரணமாகவே கமலின் விக்ரம் பட உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு டிஸ்னி ஹாட்ஸ்டார் உட்பட அந்தந்த மொழிகளில் இருக்கும் ஸ்டார் நிறுவனத்தின் ஓடிடி சேனல்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Trending News