வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறியது இவர்தான்.. கடைசி நேரத்தில் நடந்த அதிரடி ட்விஸ்ட்

Biggboss 7 Eviction: பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. எப்படியோ இறுதி கட்டத்திற்கு வந்துவிட்ட போட்டியாளர்கள் தற்போது டைட்டில் வின்னர் கனவுடன் காத்திருக்கின்றனர். நேற்று பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய நிலையில் மீதம் 7 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

அதில் விஷ்ணு நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல தேர்வாகிவிட்டார். அதை எடுத்து மீதம் இருக்கும் ஐந்து நபர்களில் இன்று விசித்ரா பிக்பாஸை விட்டு வெளியேற இருக்கிறார். ஓட்டு நிலவரப்படி பார்த்தால் மாயா தான் இறுதி இடத்தில் இருக்கிறார்.

ஆனால் அவரை வெளியேற்ற விரும்பாத விஜய் டிவி விசித்ராவை பலியாடாக மாற்றி இருக்கிறது. அதன்படி இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது விசித்ரா மட்டும்தான் வெளியேறுவார் என உறுதியான தகவல் வந்துள்ளது.

Also read: 2 நாள் கத்திட்டு மறந்திடுவாங்க.. டிஆர்பி வெறி பிடித்த விஜய் டிவி, மொத்த மானத்தையும் வாங்கிய பிக்பாஸ் 7

அதன்படி அடுத்த வாரத்தின் நடுவில் விஜய் வர்மா வெளியேற்றப்பட இருக்கிறார். அதைத்தொடர்ந்து அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், விஷ்ணு ஆகிய ஐந்து பேரும் தான் பிக்பாஸ் இறுதி மேடையை அலங்கரிக்க இருக்கின்றனர்.

இதில் அர்ச்சனாவுக்கு தான் அதிகபட்ச ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. ஆனால் விஜய் டிவி மாயாவை டைட்டில் வின்னர் ஆக்கும் முயற்சியில் இருக்கிறார்களாம். அப்படி மட்டும் நடந்தால் இது பிரதீப் விவகாரத்தை விட பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும்.

ஆனால் கமலும், சேனல் தரப்பும் வழக்கம் போல இதை பூசி மெழுகி விடுவார்கள். இருப்பினும் மாயா மட்டும் ஜெயிக்கவே கூடாது என இப்போதே கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. எது எப்படி இருந்தாலும் விஜய் டிவியின் முடிவு தான் இறுதி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Also read: கத்தை கத்தையாய் அள்ளிக் கொடுத்த பிக்பாஸ்.. கொடுத்த காசுக்கு மேல கூவும் போட்டியாளர்களின் சம்பள பட்டியல்

Trending News