வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்த வாரம் கமல் கழுத்தை பிடித்து தள்ளப் போகும் மிக்சர் பார்ட்டி.. தடுமாறும் பிக்பாஸ் ஓட்டிங் நிலவரம்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த வாரம் திடீரென நடுராத்திரியில் அனன்யா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதைத்தொடர்ந்து கூல் சுரேஷ் வார இறுதியில் வெளியேறினார். இதனால் பிக் பாஸ் ஆட்டம் சூடு பிடித்த நிலையில் இந்த வாரம் மூன்று போட்டியாளர்கள் தான் நாமினேஷனுக்கு வந்தனர். அதன்படி விசித்ரா, ரவீனா, விக்ரம் ஆகியோர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர்.

Also read: இந்த வார டிஆர்பி-யை அடித்து நொறுக்கிய டாப் 6 சீரியல்கள்.. வருட இறுதியில் முட்டி மோதும் சன், விஜய் டிவி

இதில் வழக்கம் போல விச்சு மம்மி அதிகபட்ச ஓட்டுக்களை பெற்று முதலிடத்தை தக்க வைத்திருக்கிறார். இது வாராவாரம் நடக்கும் சங்கதி தான். என்னதான் போட்டியாளர்கள் அவரை நாமினேசனுக்கு கொண்டு வந்தாலும் ரசிகர்கள் ஆதரவு இவருக்கு அதிகமாகவே இருக்கிறது.

அதனாலயே தொடர்ந்து முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு கெத்து காட்டுகிறார் விச்சு மம்மி. இவருக்கு அடுத்தபடியாக ரவீனாவுக்கு 34 சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. இதற்கு அடுத்ததாக கடைசி இடத்தில் இருக்கும் சரவண விக்ரம் 25 சதவீத ஓட்டுகளை பெற்று தத்தளித்து வருகிறார்.

Also read: ரவீனாவுக்கு சூனியம் வச்சிட்டு போன பூமர் ஆண்டி.. பிக் பாஸில் நடக்கப் போகும் எதிர்பாராத டிவிஸ்ட்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இவரை மிக்சர் பார்ட்டி என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் டைட்டில் வின்னர் என்ற தன்னம்பிக்கையுடன் இருக்கும் இவர் இப்போது தான் ஞானோதயம் வந்து விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்.

ஆனாலும் வாய்ப்பு இல்லை ராஜா என கமல் இந்த வாரம் இவரை வெளியேற்ற இருக்கிறார். இதை விக்ரமும் எதிர்பார்த்து இருப்பார். அந்த வகையில் இவருடைய வெளியேற்றத்திற்கு பிறகு அடுத்தடுத்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இப்போது அதிகமாக இருக்கிறது.

biggboss7-voting
biggboss7-voting

Trending News