வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிரதீப் முதுகில் குத்திய துரோகிகள்.. 12-ல் 4 விக்கெட் காலி, அடுத்தது இவங்க தான்.?

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. போட்டியாளர்கள் குறைய குறைய டாஸ்க்குகளும் கடுமையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி சர்வாதிகார ஆட்சியின் கீழ் வந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 பேரில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே டம்மி போட்டியாளர்கள் தான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

Also read: ரீலு அந்து போச்சு கிளம்புங்க காத்து வரட்டும்.. பிக்பாஸை விட்டு வெளியேறும் டம்மி பீஸ், தீயாய் பரவும் ஓட்டிங் லிஸ்ட்

ஆனால் அவர்கள் அத்தனை பேரும் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்ட் கொடுத்தவர்களாக இருப்பது தான் ஹைலைட். இதைத்தான் இப்போது பிரதீப்பின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் செய்து வருகின்றனர். அதன்படி ரெட் கார்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 12 பேரில் ஐசு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகிய நான்கு பேர் வெளியேறி உள்ளனர்.

மீதமுள்ளவர்களும் இனிவரும் வாரங்களில் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. அதில் தற்போது ஜோவிகாவுக்கு குறைந்த ஓட்டுகள் தான் கிடைத்திருக்கிறது. அதனாலேயே இந்த வாரம் அவருடைய வெளியேற்றத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனாலும் வனிதா ஏதாவது செய்து மகளை காப்பாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நபர்களில் ஐசு பிரதீப்பிடம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டார். தற்போது வெளிவந்துள்ள அக்ஷயாவும் ரெட் கார்டு விவகாரத்தில் நான் காதால் கேட்டதை தான் சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.. சர்வாதிகாரியான நிக்சன், என்ன கொடுமை சார் இது.!

இப்படியாக ஒவ்வொரு விஷயமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாயா, பூர்ணிமாவின் வெளியேற்றத்திற்கு பிறகு மொத்த உண்மையும் தெரியவரும். இதில் பிரதீப் மீது தவறு இருந்தாலும் கூட ரெட் கார்டு என்ற விஷயம் தேவையில்லாதது. நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் எதிரி கூட ஜெயிக்கலாம். ஆனால் முதுகில் குத்திய துரோகிகள் ஜெயிக்க கூடாது என்பது தான் பிக்பாஸ் ஆடியன்ஸின் கருத்தாக உள்ளது.

பிரதீப் முதுகில் குத்திய துரோகிகள்

biggboss7
biggboss7

Trending News