வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மூஞ்ச பாரு, கருமம் சொருகிடுவேன்.. உச்ச கட்ட ஆக்ரோஷத்தில் பிக்பாஸ் வீடு, ரெட் கார்டு யாருக்கு.?

Biggboss 7: இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீடு ரணகளமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் காலையில் வெளியான ப்ரோமோ எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்தது. அதை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது இந்த வாரம் சம்பவம் உறுதி என்று.

அதன்படி இன்று காலையிலேயே அர்ச்சனா வினுஷா விஷயத்தை தொடங்கி சண்டைக்கு அஸ்திவாரம் போட்டார். அதில் கடுப்பான நிக்சன் இப்போது அதீத கொந்தளிப்பில் இருக்கிறார். அதன் விளைவாக என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தையை விட்டுள்ளார்.

Also read: அடுத்தடுத்து Bully Gang- ஐ காப்பாற்றி விடும் விஜய் டிவியின் கேவலமான வேலை.. காஜி நிக்சனுக்கு அடித்த லக்

அந்த வகையில் மூஞ்ச பாரு, சொருகிடுவேன், வாடி போடி என அர்ச்சனாவை கண்டபடி அவர் பேசும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வினுஷாவை பற்றி நிக்சன் தரக்குறைவாக வர்ணித்து பேசியது கடும் விவாதமாக மாறியது.

அதை ஆரம்பத்தில் அசால்ட்டாக நினைத்த நிக்சன் பின்பு தவறை உணர்ந்து கொண்டு மன்னிப்பும் கேட்டார். ஆனால் அர்ச்சனா தற்போது மீண்டும் இந்த விவகாரத்தை தூண்டி அவரை கோபப்படுத்தி புது பிரச்சனையை ஆரம்பித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து நிக்சன் கொலகாண்டில் பேசியிருப்பதை பார்க்கும்போது இந்த வாரம் நிச்சயம் இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்பது தெரிகிறது. ஏற்கனவே பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ரெட் கார்டு கொடுத்து அனுப்பினார் ஆண்டவர்.

Also read: அர்ச்சனாவை மரியாதை இல்லாமல் பேசி, தாக்க முயன்ற நிக்சன்.. எல்லை மீறும் பிக் பாஸ் வீடு

தற்போது நிக்சனின் இந்த ஆக்ரோஷ தாண்டவமும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இதற்கு ஆண்டவர் அதே தீர்வை கொடுப்பாரா என்பது கேள்விக்குறி தான். இருப்பினும் இந்த ரெட் கார்டுக்கு நிக்சன் தகுதியானவர் தான் என்பது பிக்பாஸ் ஆடியன்ஸின் கருத்தாக உள்ளது.

Trending News