செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஃபினாலே டிக்கெட்டுக்கு நடக்கும் போட்டா போட்டி.. வாய்ச்சவடால் பேசி கோட்டை விட்ட மாயா, தட்டி தூக்கிய பூமர்

Biggboss 7: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியிலேயே ஏகப்பட்ட களேபரம் நடந்தது. அதை தொடர்ந்து ஒவ்வொருவரும் யாரை வெளியேற்றலாம் என பிளான் போட்டு விளையாடி வந்தனர்.

அதில் நிக்சன் செய்த போங்காட்டம் கடும் கண்டனத்திற்கு ஆளானது. இதை ஆண்டவர் நாளை விசாரிப்பார் என ஆடியன்ஸ் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஐந்து சுற்றுகளின் முடிவில் விஷ்ணு அதிகபட்ச மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அந்த வரிசையில் அவர் 10 பாயிண்ட்களை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக ரவீனா 7 பாயிண்ட்டும் மணி 6 பாயிண்ட்டும் பெற்றுள்ளனர். அடுத்ததாக தினேஷ், மாயா, நிக்சன், பூர்ணிமா ஆகியோர் தலா 4 பாயிண்ட்டுகளை பெற்றுள்ளனர்.

Also read: தினேஷுக்கு பிடித்த விச்சு ஃபோபியா.. கூட்டு சதி செய்யும் பிக்பாஸ் பூமர் அங்கிள்ஸ்

கடைசியாக விசித்ரா 3 பாய்ண்ட்டுகளை பெற்றுள்ளார். இதில் அவர் முதல் ஆட்டத்திலேயே இளசுகளுக்கு பயங்கர டப் கொடுத்து ஆடி வந்தார். ஆனால் அடுத்தடுத்து அவரிடம் ஒரு சோர்வு தெரிந்தது. அதேபோல் மாயா கேங்கும் ஆரம்பத்தில் ஒவர் வாய்ச்சவடால் விட்டு வந்தனர்.

அதிலும் பூர்ணிமா ஒரு படி மேலே போய் காரி துப்புவது, வன்மம் கக்குவது என எரிச்சலூட்டி வந்தார். இப்படியாக அலப்பறை செய்து வந்த இந்த கூட்டணி மண்ணை கவ்வியது தான் மிச்சம். ஆனால் விஷ்ணு சைலண்டாக இருந்து வேலையை முடித்து விட்டார்.

தற்போது இந்த ஃபினாலே டிக்கெட்டை தட்டி தூக்கி இருக்கும் இவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல இருக்கிறார். ஆனால் வழக்கமான ராசி படி இந்த டிக்கெட்டை ஜெயிப்பவர் நிச்சயம் டைட்டில் வின்னர் ஆக மாட்டார். அதனால் ஆட்டம் எப்படி மாறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: இவன் கூட குடித்தனம் நடத்த முடியாது. திரும்பி வந்துடாத தாயே.. சுயரூபத்தை காட்டிய விசித்ரா, விடாமல் தொடரும் பனிப்போர்

Trending News