புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஸ்ரீதிவ்யா சரிந்தது இப்படிதான், உண்மை உடைக்கும் பிரபலம்.. சைடு கேப்பில் மார்க்கெட்டை பிடித்த SK ஹீரோயின்

Actress Sri Divya: ஆந்திராவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் நல்லா பேசக்கூடிய நடிகை ஸ்ரீ திவ்யா, கோலிவுட்டில் சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதற்கு ஸ்ரீ திவ்யாவும் முக்கிய காரணம். அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனுடன் ஈடு கொடுத்து இந்த படத்தில் நடித்தார்.

அதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை என்ற படத்தில் ஜோடி போட்டார். ‘இவர் தான் அடுத்த சாவித்திரி’ என தமிழ் திரையுலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அதோடு சிவகார்த்திகேயன்– ஸ்ரீதிவ்யா அடுத்து எந்த படத்தில் இணைவார்கள் என ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர் ஆல் அட்ரஸ் தெரியாமலே காணாமல் போனார்.

தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததால் தான் படங்களில் நடிப்பதை தவிர்த்ததாக ஸ்ரீ திவ்யா சொன்னார். ஆனால் உண்மையான காரணம் என்ன என்பதை இப்போது பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்தார். ஸ்ரீ திவ்யா புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் பிரபல நடிகர் ஒருவரின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சியில், ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டியில் தண்ணீர் போட்டு அலப்பறை செய்ததுதான் அவருடைய சரிவிற்கு காரணம்.

Also Read: சிவகார்த்திகேயன் டேட்டிங் செய்து கழட்டிவிட்ட 6 நடிகைகள்.. இமானால் காற்றில் பறக்கும் மானம்

நடிகை ஸ்ரீதிவ்யாவின் சரிவுக்கு காரணம்

அந்த வீடியோ செம வைரல் ஆனது. பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி அவர்களின் கிரஹப்பிரவேசம் நிகழ்ச்சியில் தான் ஸ்ரீ திவ்யா கையில் கிளாஸ் உடன் ஆட்டம் போட்டு இருக்கிறார். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது சுதாரிக்காமல் முட்டாள் தனமாக ஸ்ரீதிவ்யா செய்த அந்த செயலால்தான் அவருக்கென்று இருந்த நல்ல பெயரை கெடுத்துவிட்டது. அந்த சைடு கேப்பில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் ஜோடி போட்டு இப்போது டாப் ஹீரோயினாக தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை ஸ்ரீதிவ்யா அன்று தண்ணி அடிக்காமல் இருந்திருந்தால், இன்று கீர்த்தி சுரேஷின் இடத்தில் அவர்தான் இருந்திருப்பார். ஸ்ரீதிவ்யாவிற்கு ஒழுங்கான வழிகாட்டுதல் இருந்திருக்கலாம், ஆனா கீர்த்தி சுரேஷின் தந்தை ஒரு ப்ரொடியூசர், தாய் ஒரு நடிகை. அப்படி இருக்கும்போது திரை உலகில் எப்படி இருக்க வேண்டும், எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும், யார் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவர்.

சில நடிகைகளை அவர்களது மேனேஜர்கள் தான் சரியான வழிகாட்டுதலுடன் தூக்கி நிறுத்துகின்றனர். அப்படி ஒரு மேனேஜர் ஸ்ரீதிவ்யாவிற்கு கிடைக்காமல் போனது. இப்போது மறுபடியும் ஸ்ரீதிவ்யா ரீ என்ட்ரி கொடுக்கப் பார்க்கிறார். இருந்தாலும் எதிர்பார்த்த டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ‘ஒரே ஒரு பார்ட்டி! ஒரே ஒரு கிளாஸ் மது!’ இப்போது ஸ்ரீதிவ்யாவின் சினிமா கேரியரை ஊற்றி மூடிவிட்டது, எல்லாம் அவருடைய கர்மா! என்று செய்யாறு பாலு மொத்த உண்மையையும் போட்டுடைத்தார்.

Also Read: சிவகார்த்திகேயனை தூக்கிவிட இமான் இசையமைத்த 5 படங்கள்.. ஊதா கலரு ரிப்பன் இல்லனா நீங்க காலி ப்ரோ

Trending News