வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அப்ப 150 கோடி வடையெல்லாம் கப்ஸாவா.. பிக்பாஸுக்காக கமல் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இதுதான்

Biggboss 7 Kamal Salary: அரசியல், சினிமா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வரும் ஆண்டவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நேரம் ஒதுக்க தவறுவதில்லை. கடந்த ஆறு சீசன்களாக திறம்பட இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்ற கமல் இந்த சீசனில் மட்டும் பாராபட்சம் காட்டி வருவது வெளிப்படையாக தெரிகிறது.

அதுவே தற்போது அவருக்கு கெட்ட பெயராகவும் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அடுத்த சீசன் இவர் தொகுத்து வழங்கக் கூடாது என்ற கண்டன குரல்களும் எழுந்தது. ஆனாலும் ஆண்டவர் தன் மீதான விமர்சனங்களை வழக்கம் போல கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் வாங்கும் சம்பளத்தின் விவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னதாக ஆண்டவருக்கு 150 முதல் 200 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

Also read: ஃபேன் இல்ல, AC போடணும்.. கோட் வேர்ட் மூலம் பிளான் பி-யை இறக்கும் பிக்பாஸ் குள்ளநரி

இது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது உண்மையான சம்பள விவரம் கசிந்துள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்குகிறார். பொதுவாக கமல் வரும் எபிசோடு சனி, ஞாயிறுகளில் காட்டப்படும்.

ஆனால் சனிக்கிழமை மட்டும் தான் ஷூட்டிங் நடக்கும். காலையில் நடக்கும் சூட்டிங் காட்சிகள் சனிக்கிழமை ஒளிபரப்பாகும். அதே போல் மதியத்திற்கு மேல் நடக்கும் ஷூட்டிங் மறுநாள் ஒளிபரப்பாகும். அப்படி பார்த்தால் ஆண்டவர் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே கால்ஷீட் ஒதுக்குகிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் முழுவதையும் சேர்த்தால் இவருடைய கால்ஷீட் 17 அல்லது 18 நாட்கள் தான் இருக்கும். அந்த கணக்குப்படி இவருடைய மொத்த சம்பளம் 25 லிருந்து 28 கோடியாக இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் 150 கோடி சம்பளம் என்ற செய்தி வெறும் கப்ஸா என தெரிய வந்துள்ளது.

Also read: இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறியது இவர்தான்.. கடைசி நேரத்தில் நடந்த அதிரடி ட்விஸ்ட்

Trending News