புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வரப்போகுது பிக்பாஸ் சீசன் 7.. சண்டைக்கோழிகளாக சீறப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் இது தான்

Bigg Boss Season 7: சின்னத்திரை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக்பாஸ் சீசன் 7 விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 6 வருடங்களாக சிறப்பான முறையில் நிகழ்ச்சியை தொகுத்து வந்ததே இதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதனாலயே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் மாதங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்த மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்படும்.

இப்படி சண்டை, சர்ச்சை, கலகலப்பு என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை காணவே இப்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனையும் ஆண்டவர்தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

Also read: 28 வருடங்களாக ஒதுங்கி இருந்த கமல்.. பாகுபலி நாயகனால் வந்த திடீர் மன மாற்றம்

அது மட்டும் இன்றி நாம் மறந்து போயிருந்த ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த செலிப்ரிட்டிகள் தான் இந்த சீசனை அலங்கரிக்க இருக்கிறார்கள். அவர்கள் யார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்ற மகேஷ் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதன் மூலம் அவருக்கு சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறாராம். இவரைத் தொடர்ந்து முதல் சீசனில் பங்கு பெற்ற பாடலாசிரியர் சினேகனின் மனைவி கன்னிகா இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக கலக்கிய சாய் தன்ஷிகாவும் இதில் பங்கேற்க இருக்கிறார்.

Also read: அதிரடியாக வெளியான பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.. கவர்ச்சி நடிகையை களம் இறக்க தயாராகும் விஜய் டிவி

அதேபோல் விஜே அஞ்சனாவும் இதில் பங்கு பெறுகிறார். இந்த பிரபலங்களோடு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கும் ப்ரஜன் ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர். இதில் விஜே ரக்சன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது ஆனால் அது உண்மை கிடையாது. அது பற்றிய எந்த தகவலும் தற்போது வரை உறுதியாகவில்லை.

இருப்பினும் இன்னும் சில விஜய் டிவியின் பிரபலங்களும் கலந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரம் அல்லது இறுதி வாரத்தில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்குகிறது. இதன் மூலம் பிரபலங்கள் சண்டைக்கோழிகளாக சீறுவார்களா அல்லது அமைதியாக மக்கள் மனதில் இடம் பிடிப்பார்களா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பிக்பாஸ் போனா மட்டும் பட வாய்ப்பு வருமா.? பப்ளிக்கா முத்தம் கொடுத்தா இப்படி தான் புலம்பனும் வின்னர்

Trending News