திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

படம் சரியா ஓடலைனா கமல், ரஜினியின் ரியாக்ஷன் இதுதான்.. அவரை தலையில் தூக்கி கொண்டாட இதான் காரணம்

80-களில் இருந்து இப்போது வரை இளம் நடிகர்களுடன் சரிக்கு சரி போட்டி போட்டுக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரை பற்றியும், பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதி கண்ணன் பேட்டி ஒன்றில் உடைத்து பேசியிருக்கிறார்.

ரஜினி மற்றும் கமல் படங்களை வாங்கி தியேட்டர்களில் விநியோகம் செய்த அனுபவத்தை வைத்து, அவர்களுடைய படங்கள் ஹிட்டானாலும் சரி, ப்ளாப் ஆனாலும் சரி இதற்கு அவர்கள் எப்படி ஒரு ரியாக்ஷனை கொடுப்பார்கள் என்பதை பாரதி கண்ணன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இவருடைய பேச்சைக் கேட்ட பலரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

Also Read: தேரை இழுத்து தெருவுல விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற சோகம்

ஏனென்றால் சினிமாவை வித்தியாசமாக பார்க்கக்கூடிய உலக நாயகன் கமலஹாசன் தன்னுடைய படம் ஓடவில்லை என சொன்னால், ரொம்பவே டென்ஷன் ஆகி விடுவாராம். அதுவும் கமல் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இது பற்றி கமலிடம் சொன்னபோது, ‘இந்த படத்திற்கு கூட ஆதரவு கொடுக்கவில்லை என்றால், மக்கள் ரொம்ப கேவலமானவர்கள்’ என்று விமர்சித்திருக்கிறார்.

ஒருவேளை கமலுக்கு கலை தாகம் அதிகமாக இருப்பதால் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால் ரஜினிகாந்தின் படத்தை வாங்கி லாபம் கிடைக்காமல் இருக்கும் விநியோகஸ்தர்கள், அவரை சந்தித்து பேசும் போது மிகவும் தன்மையாக பேசுவாராம். ‘இந்த கதை ஒர்க் அவுட் ஆகல. அதனால ரசிகர்களுக்கும் பிடிக்காமல் போயிருக்கும். அடுத்த முறை ஏதாவது செய்து உங்களுடைய நஷ்டத்தை சரி செய்து விடுகிறேன்’ என விநியோகஸ்தர்களின் மனம் புண்படாத அளவுக்கு தன்மையாக பேசி சமாளிப்பார்.

Also Read: தமிழ் நடிகைகளை கொண்டாடாத சினிமா.. ராதிகாவின் மூக்கை உடைக்க தலைவர் கொடுத்த மாஸ் என்ட்ரி

இதனால்தான் ரஜினி 73 வயதிலும் ரசிகர்களால் கொண்டாட கூடிய சூப்பர் ஸ்டார் ஆக மிளிர்கிறார். வயதானாலும் சரி இப்போதும் இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து தன்னை நிரூபிக்காமல், மக்கள் சப்போர்ட் எப்போது குறையுமோ அப்போது சினிமாவில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என ஒத்த ஆளாக படத்தில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்படித்தான் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கலாம் என சொன்ன போது, அதை வேண்டாம் என தவிர்த்து விட்டார். ‘வயதானாலும் உன்னுடைய அழகும் ஸ்டைலும் குறையல’ என நீலாம்பரி சொன்னது போல், 70 வயதைக் கடந்தும் சூப்பர் ஸ்டாரின் எனர்ஜி இளம் நடிகர்களையே வியக்க வைக்கிறது.

Also Read: இவங்க ரெண்டு பேர் சாயலில் தான் என் நடிப்பு இருக்கும்.. உண்மையை உளறிய சிவகார்த்திகேயன்

Trending News