கிபி 1000 ஆம் ஆண்டுகளில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார்.
அதன் முதல் பாகத்தை கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியீட்டு திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சோழர்களின் பெருமையை பறைசாற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக குந்தவை கேரக்டரில் திரிஷா சிறப்பாக நடித்திருந்தார்.
Also Read: பொன்னியின் செல்வனில் மிரட்டும் 10 கதாபாத்திரங்கள்.. ஒவ்வொருத்தராய் பார்த்து செதுக்கிய மணிரத்தினம்
இன்னிலையில் நிஜ குந்தவையின் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது. சோழ இளவரசியான குந்தவை வல்லவரையன் வந்தியத்தேவனின் பட்டத்து ராணியாக வாழ்ந்தார்.
மலேசியா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழ இளவரசி குந்தவையின் அரிய புகைப்படத்தை ராஜராஜன் வழிவந்த இந்து சொந்தங்கள் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதை பலரும் ஆர்வத்துடன் பார்ப்பது மட்டுமின்றி அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
Also Read: குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா
இதில் இருக்கும் குந்தவையின் கெட்டப் அப்படியே பொன்னியின் செல்வன் படத்தில் வந்த திரிஷாவின் கெட்டப் போல் அப்படியே இருக்கிறதே என ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதற்கு முன்பு மணிரத்னம் மற்றும் அவருடைய படக்குழு பல ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே படமாக்கினார்கள் என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்கின்றனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் தொடர்ந்து அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகயிருக்கும் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்களை ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.