புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இயக்குனர் திருசெல்வத்தின் சுயமரியாதையை சீண்டிய சம்பவம்.. எதிர் நீச்சலுக்கு சுபம் போட இதான் காரணம்

Ethirneechal: சன் டிவியின் டிஆர்பியை எகிற வைத்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது ஆடியன்ஸுக்கு பேரதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது.

வரும் 8ம் தேதியோடு இந்த சீரியல் முடிவுக்கு வரும் நிலையில் அந்த நேரத்தில் சிங்க பெண்ணே ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் திடீரென சீரியல் முடிவுக்கு வர காரணம் என்ன என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

அதைத்தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சில பிரபலங்கள் ஒரு சில செய்திகளை பகிர்ந்துள்ளனர். அதன்படி மாரிமுத்து இறந்ததற்கு பிறகு சீரியலின் போக்கு சரியில்லை என்ற கருத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

ஆனால் சீரியலின் வெற்றிக்கு ஒருவர் மட்டும்தான் காரணம் என்பதை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் தனக்கென ஒரு ஸ்டைலை வைத்து அந்த சீரியலை கொண்டு சென்றார்.

அதற்கேற்றார் போல் சேனல் தரப்பும் அவருக்கான சுதந்திரத்தை கொடுத்திருந்தது. ஆனால் திடீரென மாரிமுத்துவின் மறைவு ஒரு சறுக்களை கொடுத்தது என்னவோ உண்மை தான்.

எதிர்நீச்சல் பஞ்சாயத்து

இருப்பினும் திருச்செல்வம் அதை கண்டு கொள்ளாமல் தான் நினைத்தது போல் சீரியலை கொண்டு சென்றார். ஆனால் சேனலுக்கு தொடர்ந்து வெளி வந்த ரசிகர்களின் கமெண்டுகள் அதிருப்தியை கொடுத்திருக்கிறது.

அதனால் காட்சிகளில் சில மாற்றங்களை செய்ய சொல்லி சேனல் தரப்பு இயக்குனரிடம் கூறி இருக்கிறது. மேலும் அவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் பல இடையூறுகள் செய்ததாக சொல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இயக்குனருக்கு சில வாரங்களுக்கு முன் ஒரு இமெயில் வந்திருக்கிறது. அதை பார்த்த பிறகு தான் அவர் சீரியலை முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கே வந்திருக்கிறார்.

அப்படி என்றால் அவர் சுயமரியாதையை சீண்டும் விதமாக சேனல் தரப்பு ஏதோ சொல்லி இருக்க வேண்டும். அதனாலேயே தற்போது எதிர்நீச்சல் சீரியலுக்கு சுபம் போடப்பட்டுள்ளது.

எதிர்நீச்சலை அவசரமாக முடிக்கும் இயக்குனர்

Trending News