Kamal Salary Reason in Kalki: கமல் இப்போது பயங்கர பிசியாக இருக்கிறார். ஒரு பக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் அரசியல் இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி என அவர் முழு எனர்ஜியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் கை நிறைய காசையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பல கோடிகளை சம்பளமாக வாங்கி இருக்கும் ஆண்டவர் கல்கி படத்திற்காக 150 கோடி பெற்றுள்ளார். இத்தனைக்கும் வெறும் 20 நாட்கள் தான் அவர் கால்ஷூட் கொடுத்திருக்கிறார். நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இதில் உலக நாயகன் நடிக்க இருப்பது பெரும் ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் இந்த சம்பள விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறதாம். அதற்கும் சேர்த்து தான் கமலுக்கு இவ்வளவு கோடி சம்பளத்தை அவர்கள் பேசி இருக்கிறார்கள்.
Also read: திறமை இருந்தும் 35 வருடம் போராடி பெற்ற அங்கீகாரம்.. கமலை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர்
அதில் கமல் தற்போது ஆறு நாட்களுக்கான காட்சிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள கால்ஷூட்டையும் அவர் விரைவில் முடித்துக் கொடுத்து விடவும் தயாராக இருக்கிறாராம். அதன்படி 600 கோடியில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.
ஏற்கனவே பிரபாஸ் ஆதிபுருஷ் மூலம் ராம அவதாரம் எடுத்திருந்தார். அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் இந்த கல்கியின் மூலம் அவர் எடுக்கப் போகும் அவதாரம் புதுமையாக இருக்குமாம். அதனாலேயே இப்போது இந்த கல்கி இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Also read: சலார் படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே இத்தனை கோடியா.? வசூலில் தும்சம் செய்யும் பிரபாஸ்