மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியால் வெறித்தனமாக கம்பேக் கொடுத்திருக்கும் சிம்பு அடுத்ததாக நடிக்கும் பத்து தல படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.
வரும் மார்ச் மாதம் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார்.
Also Read: 2022-ல் வெளிவந்த உடனே ட்ரெண்டான 10 பாடல்கள்.. விஜய்க்கு டஃப் கொடுத்த சிம்பு
மேலும் இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய பத்து தல படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருப்பதால் இந்தப் படத்தில் சிம்புக்கான மாஸ் பிஜிஎம் எப்படி இருக்கும் என்பதை கேட்பதற்காகவே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்க்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதமே நிறைவடைந்த நிலையில் சிம்பு அடுத்து மிஸ்கினுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். எனவே பத்து தல படத்திற்குப் பிறகு தற்போது வெக்கேஷனில் இருக்கும் சிம்பு கடந்த ஒரு மாதமாக தாய்லாந்தில் தான் இருக்கிறார்.
Also Read: லோகேஷ் யுனிவர்சலில் இணையும் சிம்பு.. மீண்டும் ஒரு தொட்டி ஜெயா
பத்து தல படத்தை முடித்த குஷியோடு அங்கே சென்றவர் செம ஜாலி செய்து வருகிறார். ஆனால் அவர் தாய்லாந்து போன காரணம் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் சண்டை பயிற்சி கற்றுக் கொள்வதற்காகத்தான் போயிருக்கிறார். அங்கே பகலில் முழுவதும் பயிற்சி, இரவில் ஜாலி என செம என்ஜாய் பண்ணி வருகிறார்.
இவர் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் சண்டை பயிற்சியை கற்றுக் கொள்கிறார் என்றால், அவர் அடுத்து நடிக்க இருக்கும் மிஸ்கின் படத்திற்கு முக்கியமாக தேவைப்படலாம். எனவே தாய்லாந்துக்கு சிம்பு செல்வதற்கு இதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.