Kamal: நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், கமல், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் கல்கி 2898 AD படம் உருவாகி இருக்கிறது. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் கூட இதன் ட்ரெய்லர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. சூப்பர் ஹீரோ பாணியில் வெளிவந்த அந்த ட்ரெய்லரின் இறுதியில் கமலின் என்ட்ரி வேற லெவலில் இருந்தது.
இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கப் போகிறார் என கேள்விப்பட்டதுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனாலும் ஆண்டவர் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால் நிச்சயம் அவருடைய கேரக்டர் பவராக இருக்கும் என எதிர்பார்த்தனர்.
அதற்கேற்றார் போல் ட்ரெய்லரில் சில நொடிகள் மட்டுமே வந்த அவருடைய தோற்றம் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. கமல் இதுவரை எத்தனையோ கெட்டப்புகளில் விதவிதமான மேக்கப்புகளில் வந்திருக்கிறார்.
கல்கியில் கமல் நடிக்க காரணம்
ஆனாலும் கல்கியில் அவருடைய கெட்டப் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த கதைக்காக கமல் 15 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
அதில் முதல் பாகத்தை பொருத்தவரையில் மூன்று நாட்கள் மட்டுமே அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அப்படி என்றால் படத்தின் இறுதியில் தான் அவருடைய காட்சி இருக்கும் என தெரிகிறது. அதை அடுத்து இரண்டாம் பாகம் முழுவதும் இவருடைய ஆதிக்கம் தான்.
அது மட்டும் இன்றி கமல் இப்படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக மட்டுமே வருகிறார். சில படங்களில் வில்லன் இறுதியில் திருந்தி விடுவது போல் காட்டி இருப்பார்கள். ஆனால் இதில் கமல் வில்லன் மட்டும் தான்.
இதுவே ஒரு ஆர்வத்தை தூண்டி இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் ஆண்டவர் இதில் புதுசா என்னமோ செய்யப் போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
வித்தியாசமான கெட்டப்பில் அசத்தும் கமல்
- ஆண்டவர் தீர்க்கதரிசி ஏன் தெரியுமா.?
- கமலால் உச்சகட்ட கோபத்தில் கல்கி தயாரிப்பாளர்
- 70 வயதிலும் 3 சவாலான வேடங்களில் கமல்