திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆண்டவர் என கமலுக்கு பெயர் வர இதுதான் காரணம்.. உலக நாயகனிடம் முட்டி மோதி முக்குடைந்த சினிமா

Actor Kamal: இன்றைய கால கட்டத்திலும், இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டியாய் களமிறங்கி வருகிறார் கமலஹாசன். இன்று வரை தன் அடுத்த கட்ட படங்களுக்கு ஆர்வம் காட்டி வரும் இவருக்கு ஏன் ஆண்டவர் என பெயர் வந்தது என்பதற்கான அர்த்தத்தைப் பற்றிய சில குறிப்புகளை இங்கு காண்போம்.

இத்தனை வருட காலம் தமிழ் சினிமாவில் பயணிக்கும் இவரின் அனுபவம் ஜாஸ்தி என்பதால் இயக்குனர்கள் இவரிடம் பேசக்கூட பயப்படுவார்கள். அவ்வாறு சினிமாவை பொறுத்த வரை இவருக்கு தெரியாத விஷயங்கள் ஒன்றுமே இல்லை.

Also Read: அந்த மாதிரி விஷயத்தில் தமிழ் ஹீரோக்கள் ரொம்ப மோசம்.. கழுவி ஊற்றிய நித்யா மேனன்

பல காவியங்களை அறிந்து வைத்துள்ள இவர் தினமும் புக்கு படிக்கும் பழக்கம் கொண்டவர். அதுவும் நாளைக்கு வெளியாகும் புத்தகத்தை இன்று ஆர்டர் செய்து படிக்கும் ஆர்வம் கொண்டவர். இது போன்று தன் பொது அறிவு திறனை வளர்த்துக் கொண்ட இவர் சினிமாவில் யார் படங்கள், என்ன கதை என்பதையும் நன்கு அறிவார்.

அவ்வாறு இவர் முன்பு சொல்லிய பல விஷயங்கள் இன்று நடைமுறையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு இவர் இனிமேல் தமிழ் சினிமாவை நம் வீட்டில் இருந்தவாறு டிவியிலேயே பார்க்கலாம் என்றார். அது தற்பொழுது ஓ டி டி மூலம் நிறைவேறி கொண்டிருக்கிறது. மேலும் தேவர் மகன் படத்தில் சிவாஜி உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் இவர் ஹோட்டல் ஆரம்பிப்பதாக கூறுவார்.

Also Read: 42 வருடமாய் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்.. யாராலயும் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்.!

அதற்கு உதாரணமாகவே மேக் டொனால்ட்ஸ் போன்ற வெளிநாட்டு வாழ் மக்கள் உண்ணும் உணவு பழக்கத்தை மேற்கொண்டு வருகிறோம். மேலும் இவர் அன்பே சிவம் படத்தில் சொன்னவாறு சுனாமி பேரலையும் நிகழ்ந்தது. அப்படத்தில் ஏற்படும் ரயில் விபத்து போல தற்பொழுது நிகழ்ந்து பேரழிவை ஏற்படுத்தியது.

மேலும் இவர் 10 மாறுபட்ட கதாபாத்திரத்தில் மேற்கொண்ட படமான தசாவதாரத்தில் வைரஸ் என்னும் நுண்ணுயிர் கிருமியை அறிமுகப்படுத்தியது போல் கொரோனாவும் படாத பாடுபடுத்தி விட்டது. இதுபோன்று இவர் அனுபவத்தில் மேற்கொண்ட பல சம்பவங்கள் நிஜத்தில் நிகழ்ந்ததால், மக்களால் ஆண்டவர் என அழைக்கப்படுகிறார்.

Also Read: பிரபாஸின் தல தப்பியதா.? ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Trending News