Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

என்னுடைய படத்தில் சொதப்பல்கள் இது தான் காரணம்.. விஷயத்தை போட்டு உடைத்த சிவகார்த்திகேயன்

சிபிச் சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கு முன்னதாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் […]

சிபிச் சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கு முன்னதாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு சிவகார்த்திகேயன் பேட்டி அளித்து வருகிறார். என்னுடைய படத்தில் சில சொதப்பல்கள் வர என்ன காரணம் என்பதை இதில் கூறியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

ஆனால் அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. மேலும் இப்படத்தின் தோல்வியால் கடனாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியால் ஓரளவு மீண்டு தற்போது ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் நடுவில் இவர் தொடர் சறுக்கலுக்கு காரணம் என்ன என்பதை கூறியுள்ளார். அதாவது தோல்வி படங்கள் எல்லாத்தையும் பார்த்தால் படத்தின் கருவிலேயே பிரச்சினை இருப்பதாக கூறினார். நாம் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து வருவதால் இப்படத்தை பற்றி 20 பேரிடம் கருத்துக் கேட்டால் ஒவ்வொருவரும் வெவ்வேறு வார்த்தைகளில் தங்களது விமர்சனங்களை கூறுவார்கள்.

ஆனால் அதை அனைத்தையும் ஒருசேர பார்த்தால் அந்த ஒரு விஷயத்தை மையப்படுத்தி தான் இருக்கும். அதனால் ஒவ்வொரு படங்களிலும் தாங்கள் செய்த தவறை அடுத்த படத்தில் நிகழக்கூடாது என பார்த்து பண்ணுவதாக அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறினார்.

இதனால் தற்போது சிவகார்த்திகேயன் கதையை கேட்ட பின்பு தனக்கு பிடித்து இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க சம்மதித்து வருகிறார். இந்நிலையில் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.