வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரதீப் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி.. மொத்த பிரச்சனைக்கும் காரணமான கருப்பு ஆடு

Biggboss 7: தோண்ட தோண்ட மர்மங்கள் வெளிவருவது போல பிரதீப் விவகாரத்தில் இப்போது பல விஷயங்கள் சிக்கி வருகிறது. அதை வீடியோவாக வெளியிட்டு வரும் பிரதீப் ஆர்மி ஆண்டவரை வச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸில் நடந்த மொத்த பிரச்சனைக்கும் காரணமான கருப்பு ஆடு யார் என்று தெரிய வந்துள்ளது.

அதாவது பிரதீப் பெண்களைப் பார்த்து படுமோசமாக கமெண்ட் கொடுக்கிறார். அதனால் எங்களால் இயல்பாக இருக்க முடியவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என ஒரு குரூப் உரிமை குரல் எழுப்பியது. அதை பற்றி தீர விசாரிக்காத கமல் இது என் வீடு. இங்கு பாதுகாப்பு தான் முக்கியம் என கூறி ரெட் கார்டை தூக்கி கொடுத்து பிரதீப்பை துரத்தினார்.

அதைத்தொடர்ந்து இப்போது சோஷியல் மீடியாவில் பெரும் பிரளயமே நடந்து வருகிறது. அதிலும் பூர்ணிமா வைத்த குற்றச்சாட்டு பொய் என்ற வீடியோ ஏற்கனவே வெளியாகி அவருடைய முகத்திரையை கிழித்து இருந்தது. அதை தொடர்ந்து இப்போது வீட்டில் இருக்கும் மாயா கோஷ்டி அனைவரும் நாம் தப்பித்தால் போதும் என உண்மையை உளறி வருகின்றனர்.

Also read: ஆண்டவருக்கு எதிராக இணைந்த முந்தின சீசன் போட்டியாளர்கள்.. பிக்பாஸுக்கே தண்ணி காட்டிய பிரதீப்

அதிலும் கமல் சார் தான் ரெட் கார்டு விஷயத்தை ஆரம்பித்தார் என்று அவர் மேலேயே பழியை போட்டதுதான் ஹைலைட். இதனாலேயே இப்போது வார இறுதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது பிரதீப் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி ரவீனா தான் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள யுகேந்திரன் இது பற்றிய உண்மையை வெளியிட்டுள்ளார். ஒருமுறை பிரதீப், யுகேந்திரன், ரவீனா பேசிக் கொண்டிருந்தபோது மூக்குத்தி பற்றிய பேச்சு வந்திருக்கிறது. அப்போது நடந்த உரையாடலில் பிரதீப் முகம் சுளிக்க வைக்கும் கமெண்ட் கொடுத்தார் என்பதுதான் அவருடைய குற்றச்சாட்டு.

அதைப் பற்றி கூறியிருக்கும் யுகேந்திரன் நிச்சயம் அப்படி கிடையவே கிடையாது. அவர் சாதாரணமாக பேசிய ஒரு வார்த்தையை இவர்கள் இரட்டை அர்த்த வசனமாக திரித்து கூறியிருக்கின்றனர். நானும் அங்கு தான் இருந்தேன். அந்த அர்த்தத்தில் பிரதீப் பேசவே இல்லை என அவர் தன் மனைவியிடம் தெளிவுபடுத்தியுள்ளார். அந்த வீடியோ இப்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.

Also read: தீர விசாரிப்பதே மெய்.. சோலியை முடிக்க வரும் பிரதீப், பின்வாங்கும் ஆண்டவர்

இதை பார்த்த ரசிகர்கள் ரவீனாவை கழுவி ஊற்றி வருகின்றனர். காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் கதையாக இருக்கிறது இந்த விவகாரம். ஏற்கனவே மாயா கோஷ்டி இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அவர்களிடம் ரவீனா இதை கூறிய நிலையில் அப்படியே அதை மாற்றி பிரதீப் மேல் இருக்கும் வன்மத்தை காட்டி இருக்கின்றனர். தற்போது இந்த முடிச்சும் அவிழ்ந்த நிலையில் கமலின் நடவடிக்கை என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News