நாளுக்கு நாள் ரணகளமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏலியன் மற்றும் காட்டுவாசி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. சும்மாவே ஆதிவாசி போல் நடந்து கொள்ளும் போட்டியாளர்கள் இந்த டாஸ்க் மூலம் பிக்பாஸை மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் வச்சி செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே அடிதடி, சண்டை என்று நகர்ந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் படுமோசமாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு போட்டியாளர்கள் மீன் மார்க்கெட் போன்று சண்டை போட்டு பார்ப்பவர்களை எரிச்சல்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி மன உளைச்சலை உண்டு பண்ணுவதாக ரசிகர்கள் கதறி வருகின்றனர்.
Also read: ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு
எப்படா இந்த டாஸ்க் முடியும் என்று ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்கள் வார இறுதி நாளில் ஆண்டவரின் தரிசனத்தை காண ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் இணையத்தை கலக்கி வருகிறது. அதற்கான ஓட்டிங் லிஸ்ட்டும் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் கதிரவன், ரட்சிதா மகாலட்சுமி, மைனா நந்தினி, ஜனனி, தனலட்சுமி, குயின்சி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர். அதில் பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் கதிரவன் அதிக ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ரட்சிதாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருக்கிறது.
Also read: பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அப்பா.. மாஸ்டரின் மறுபக்கத்தை கூறி கதறல்
உண்மையில் இந்த பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சேஃப் கேம் ஆடி வருகின்றனர். ஆனாலும் இவர்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜனனி அதிக ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார். இந்த வாரம் இவருடைய பேச்சும், நடவடிக்கையும் ரசிகர்களை கோபப்படுத்திய நிலையில் இனி வரும் நாட்களில் இவருக்கான ஆதரவு குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. இவருக்கு அடுத்து மைனா நந்தினி, குயின்சி, தனலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர்.
இணையத்தை கலக்கும் ஓட்டிங் லிஸ்ட்

அதில் குயின்சி மற்றும் தனலட்சுமி இருவரும் சரிசமமான ஓட்டுக்களை பெற்றுள்ளனர். எப்போதுமே அதிக ஓட்டுக்களை வாங்கி காப்பாற்றப்படும் தனலட்சுமி இந்த வாரம் கடைசி இடத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த இரண்டு பேரில் பிக் பாஸ் வீட்டில் டம்மி பீசாக திரிந்து கொண்டிருக்கும் குயின்சி தான் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். கதிரவனுடன் கடலை போடுவதை தவிர இவர் இந்த வீட்டில் வேறு ஒன்றும் செய்யவில்லை. அதனால் இவர் வெளியேற்றப்படுவதில் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
Also read: பிக்பாஸ் பட்டத்தை தட்டி தூக்க போவது இவர்தான்.. ஓப்பனாக பேசிய மகேஸ்வரி