June 14 OTT release: முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை வர போகிறது தியேட்டர் ரிலீசுக்கு இந்த படம் வர போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே தொற்றி கொள்ளும். அந்த லிஸ்டில் இப்போது OTT ரிலீசும் சேர்ந்து விட்டது.
என்னதான் தியேட்டரில் கூட்டத்தோடு கூட்டமாக படத்தை பார்த்து சந்தோச பட்டாலும், குடும்பத்தோடு போக கொஞ்சம் தயங்க தான் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வர பிரசாதமாக தான் இந்த OTT தளங்கள் இருக்கின்றன.
குடும்பத்தோடு உட்கார்ந்து அமைதியாக படம் பார்க்க நிறைய பேருக்கு ஆர்வம் வந்துவிட்டது. பயணங்களின் போது ஹெட் போனை மாட்டிக்கொண்டு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து படம் பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது.
ஜூன் 14 தியேட்டர் ரிலீஸ்
படம்: மகாராஜா
ஹீரோ: விஜய் சேதுபதி
நடிகைகள்: மம்தா மோகன்தாஸ், அபிராமி
படக்குழு: அனுராக் காஷ்யப், முனீஸ்காந்த், சிங்கம் புழு, அருள் தாஸ்
இயக்குனர்: நித்திலன் சாமிநாதன்
ரசிகர்களின் மன நிலைமையை புரிந்து கொண்ட OTT தளங்களும் எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், ரிலீஸ் ஆன 60 நாளில் தங்களுடையில் தளங்களில் ரிலீஸ் செய்து விடுகின்றன. அப்படி இந்த வார ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்.
ஆஹா தமிழ் களம் இறக்கும் தரமான படம்
குரங்கு பெடல்: வட்டம், மதுபான கடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளியான படம் தான் குரங்கு பெடல். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ் கே ப்ரொடக்சனுடன் இணைந்து மாண்டேஜ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
கடந்த மே மாதம் ரிலீஸ் ஆன இந்த படம் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் படமாக்கப்பட்டு பல பாராட்டுகளை பெற்றது. சைக்கிள் என்னும் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ஆஹா தமிழ் OTT தளத்தில் ஜூன் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடலும் விஜய் சேதுபதியின் 50வது படமும் ஒரே நாளில் வெளிவந்து ரசிகர்களை குஷிப் படுத்தி உள்ளது.
கேங்ஸ் ஆஃப் கோதாவரி: விஷ்வாக் சென் மற்றும் அஞ்சலி நடித்த கேங்ஸ் ஆஃப் கோதாவரி படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த படம் நெட்பிலிக்சில் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியானது.
பருவு: நிவேதா பெத்துராஜ் மற்றும் ராகுல் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆக்சன் த்ரில்லர் வெப் சீரிஸ் தான் பருவு. இந்த சீரிஸில் நாகபாபு முக்கியமான நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். ஜீ 5 OTT தளத்தில் இந்த சீரிஸ் ஜூன் 14 வெளியாகிறது.
சமீபத்திய OTT ரிலீஸ்
- ஹாட் ஸ்பாட் வெற்றியின் 5 முக்கிய ரகசியங்கள்
- டீசர் ஏற்படுத்திய பீதி, கங்குவாவை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்
- விஜய் சேதுபதி தொடங்கிய புதிய ஓடிடி