ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாரதிகண்ணம்மாவை தூக்கி எறிந்த பாக்கியலட்சுமி.. எகிறும் விஜய், சன் டிவி டிஆர்பி

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் எது என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில் இந்த வாரத்திற்கான விஜய் டிவி மற்றும் சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் சோஷியல் மீடியாவில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியல் இரண்டாம் இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாவது இடத்தையும், ராஜா ராணி2 சீரியல் 4-ஆம் இடத்தையும் பிடித்திருக்கிறது.

ஐந்தாவது இடம் தமிழும் சரஸ்வதியும், ஆறாவது இடம் மௌனராகம் சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து காற்றுக்கென்ன வேலி, தென்றல் வந்து என்னை தொடும், நாம் இருவர் நமக்கு இருவர்2, ஈரமான ரோஜாவே2 போன்ற சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதைப்போன்றே சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் வழக்கம்போல் கயல் சீரியல் முதலிடத்தையும், சுந்தரி இரண்டாமிடத்தையும், வானத்தைப்போல மூன்றாவது இடத்தையும், ரோஜா நான்காவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

மேலும் கண்ணான கண்ணே ஐந்தாவது இடத்தையும், எதிர்நீச்சல் ஆறாவது இடத்தையும், அபியும் நானும் 7-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. அதேபோல் அன்பே வா எட்டாம் இடமும் அருவி, தாலாட்டு, சந்திரலேகா, பாண்டவர் இல்லம், சித்தி2 போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

இவ்வாறு சின்னத்திரை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் ஒவ்வொரு வாரமும் போட்டிபோட்டுக்கொண்டு தங்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கை பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றது.

Trending News