வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

டிஆர்பி-யில் டாப்புக்கு வந்த சீரியல் இதான்.. விஜய் டிவியை அடித்து நொறுக்கிய சன் டிவி

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கின்றனர் என்பதை இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் வழக்கம்போல் சன் டிவி சீரியல் ஆன கயல் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை வானத்தைப்போல சீரியலும், மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியலும், நான்காவது இடத்தை ரோஜா சீரியலும் பிடித்திருக்கிறது.

அதைப்போல் ஐந்தாவது இடம் விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் முழுவதும் விருவிருப்பான கதைக்களத்துடன் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறியது. இதில் அர்ச்சனா செய்த சதித்திட்டம் சிவகாமிக்கு தெரிய, அதன்பிறகும் சந்தியாவை பழிவாங்கும் எண்ணத்தில் அர்ச்சனா தன்னுடைய வில்லத்தனத்தை சமயம் பார்த்து நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு டிஆர்பி-யில் சரசரவென முன்னேறி டாப் 5 இடத்தை ராஜா ராணி2  சீரியல் பிடித்திருப்பது சின்னத்திரை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆறாவது இடம் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.

மேலும்  ஏழாவது இடம் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மாவிற்கும், எட்டாவது இடம் பாக்கியலட்சுமி, 9-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெற்றிருக்கிறது. இந்த மூன்று சீரியல்களும் எப்பொழுதும் டாப்-5 இடத்தில் இருக்கும். ஆனால் தற்போது பின்னடைவை சந்தித்தது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன் 10-வது இடம் புதிதாகத் துவங்கப்பட்ட சன் டிவியின் எதிர்நீச்சல் என்ற புத்தம் புது சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் எதிர்பாராத விதத்தில் சீரியல்களின் டாப் லிஸ்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

Trending News