ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தொடர்ந்து முதல் இடத்தை பிடித்த ஒரே சீரியல்.. இணையத்தை கலக்கும் டிஆர்பி ரேட்டிங்

சின்னத்திரை ரசிகர்களிடையே சன் டிவி சீரியல் என்றால் தனி மவுசு. ஏனென்றால் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் கதைக்களமும் காட்சியமைப்பும் திரைப்படத்திற்கு நிகராக இருக்கும் என்பதே அவர்களது கருத்து.

அப்படி இருக்கும் சன் டிவி சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே சுமார் 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் அனுதினமும் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருப்பதால், அந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வார இறுதி நாளன்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் வழக்கம்போல் கயல் சீரியல் முதலிடத்தைப் பிடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ்வும், கதாநாயகியாக கயலும் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான சின்னத்திரை சீரியல் ஜோடிகள் ஆகவே மாறியுள்ளனர்.

கடந்த வாரம் ஒளிபரப்பான கயல் சீரியலில் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த சீரியலாக இருந்ததால் இந்த முதலிடம் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அண்ணன் தங்கை பாசப் போராட்டத்தை வெளிக்காட்டும் வானத்தைப்போல சீரியல் இரண்டாமிடத்தையும் பெற்றிருக்கிறது

அதைத்தொடர்ந்து இரண்டு மனைவிகளை ஒரே டிராக்கில் கதாநாயகன் எப்படி கச்சிதமாக ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை காட்டிய சுந்தரி சீரியல் இடத்தையும், ரொமான்டிக் சீரியல் ஆன ரோஜா சீரியல் நான்காம் இடத்தையும் பிடித்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து கண்ணான கண்ணே சீரியலுக்கு 5-ஆம் இடமும், புத்தம்புது சீரியல் ஆண்ட எதிர்நீச்சல் சீரியல் ஆறாம் இடமும், நம்மையெல்லாம் குழந்தை பருவத்திற்கு அழைத்துச் செல்லும் அபியும் நானும் சீரியல் 7-ஆம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

இதைத்தொடர்ந்து அருவி 8-ஆம் இடத்தையும், சந்திரலேகா 9-ஆம் இடத்தையும், ஆண்டவர் இல்லம் 10-ஆம் இடத்தையும் பெற்றிருக்கிறது. இதேபோன்று மீதமிருக்கும் சன் டிவியின் விருவிருப்பான நெடுந்தொடர்கள் ஆன தாலாட்டு, சித்தி 2, திருமகள், மகரா,சி பூவே உனக்காக போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கிறது.

Trending News